அபுதாபியில் வெள்ளிக்கிழமை இலவசமாக அளிக்கப்பட்டுவந்த பொது பார்க்கிங் கட்டணம் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் இலவசமாக வழங்கப்படும் என்று போக்குவரத்துத் துறை ஆணையம் அறிவித்துள்ளது. போக்குவரத்துத் துறையின் தேவைகளுக்கு ஏற்ப இந்த முடிவு வந்துள்ளதாகவும், வார நாட்களில் உச்ச நேரங்களில் போக்குவரத்து நெரிசலை அதிகரிக்கவும், மக்கள் நடமாட்டத்தை எளிதாக்கவும், அமீரக சாலைகளில் பாதுகாப்பை உயர்த்தவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக அபுதாபியில் வாகன நிறுத்தத்தை ஒழுங்குபடுத்தும் 2009 ஆம் ஆண்டுக்கான சட்ட எண் 18 இன் நிர்வாக விதிமுறைகளின் திருத்தம் மற்றும் அபுதாபி போக்குவரத்து கட்டணங்கள் தொடர்பான 2017 ஆம் ஆண்டிற்கான சட்ட எண் 17 இன் நிர்வாக விதிமுறைகளின் திருத்தம் குறித்தும் ஆணையம் அறிவித்தது.
அதன்படி, புதிய முடிவை அமல்படுத்தும் வகையில், அபுதாபி உள்ள ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம், நகராட்சிகள் மற்றும் போக்குவரத்துத் துறையுடன் இணைந்து, பொது வாகன நிறுத்துமிடங்களில் பார்க்கிங் கட்டணம் மற்றும் தர்ப் டோல் அமைப்புக்கான கட்டணத்தை பரிசீலிப்பதற்கான தேதியில் திருத்தம் செய்வதாக அறிவித்தது. மேலும் அமீரக போக்குவரத்து கட்டணங்கள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இருக்கும் என்றும் ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் இலவசமாக செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.