ADVERTISEMENT

அமீரகத்தில் பணிபுரியும் உங்களது நிறுவனம் சம்பளத்தில் பிடித்தம் செய்வது ஏன்..?

Published: 28 Jul 2022, 8:06 PM |
Updated: 28 Jul 2022, 8:06 PM |
Posted By: admin

நீங்கள் உங்கள் முதலாளியிடமிருந்து கடன் வாங்கியிருக்கிறீர்களா அல்லது உங்களால் ஏற்பட்ட ஏதேனும் சேதங்கள் காரணமாக நிறுவனத்திற்குப் பணம் செலுத்த உள்ளீர்களா? அப்படியானால், உங்கள் சம்பளத்திலிருந்து எவ்வளவு தொகையை நிறுவனத்தால் கழிக்க முடியும்?

ADVERTISEMENT

அமீரக தொழிலாளர் உறவுகளை ஒழுங்குபடுத்துவதற்கான 2021 இன் ஃபெடரல் ஆணை சட்டம் எண் 33, பிரிவு 25-இன்படி,  பணியாளரின் சம்பளம் கழிக்கப்படுவது குறித்த விதிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது.

தொழிலாளரின் ஊதியம் கழிக்கப்படுவதற்கு எந்த காரணங்கள் இருந்தாலும், 50 சதவிதத்துக்குள் சம்பளத்தை குறைக்க சட்ட வரம்பு உள்ளது.

ADVERTISEMENT

அதற்கான வரைமுறை இதோ..

  • தொழிலாளியின் எழுத்துப்பூர்வ ஒப்புதலுக்குப் பிறகு தொழிலாளிக்கு வழங்கப்பட்ட கடன்களை சம்பளம் மூலம் திரும்பப் பெறுதல்.
  • அமீரகத்தில் நடைமுறையில் உள்ள சட்டத்திற்கு இணங்க, திட்டங்கள், ஓய்வு ஊதியங்கள் மற்றும் காப்பீடுகளுக்கான பங்களிப்பைக் கணக்கிடுவதற்கான கட்டணங்கள் கழிக்கப்படுகின்றன.
  • சமூகத் திட்டம், சலுகைகள் அல்லது பிற சேவைகளுக்கு நிறுவனங்கள் பணம் அளிக்கும்போது, தொழிலாளியும் சம்பளத்திலிருந்து நிறுவனம் மூலம் பணம் வழங்லாம். நிறுவனம் மூலம் தொழிலாளியின் அனுமதியுடன் வழங்கப்பட்ட பணம் சம்பளத்தில் பிடிக்கப்பட்டு வழப்படுவதாகும்.
  • அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் தொழிலாளர்கள் அரசின் விதிகளை மீறி பணி செய்தால் அவர்களின் ஊதியத்திலிருந்து 50 சதவீதம் கழிக்க உரிமை உண்டு.
  • தொழிலாளியின் பிழை அல்லது முதலாளியின் உத்தரவை மீறி, தொழிலாளி செய்த தவறை சரிசெய்வதற்குத் தேவையான தொகைகளுக்கு சம்பளம் பிடிக்கப்படும்.
  • ஒரு மாதத்திற்கு ஐந்து நாட்களுக்கு மேல் நிறுவனங்கள் ஊதியம் பிடித்தம் செய்யக் கூடாது.
  • சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்ய பல காரணங்கள் இருந்தாலும், 50 சதவீதத்துக்கும் மேல் கழிக்கக்கூடாது.

மேல் குறிப்பிட்ட வரைமுறைகளின் கீழ் நீங்கள் உடன்படாவிட்டால், நீங்கள் பணிபிரியும் நிறுவனம் உங்கள் சம்பளத்தை கழிக்காமல் முழுவதுமாக வழங்கும்.