ADVERTISEMENT

UAE: ஆன்லைனில் முன்பதிவு செய்யும் துபாய் குளோபல் வில்லேஜ் டிக்கெட்டுகளுக்கு 10% தள்ளுபடி..!

Published: 27 Aug 2022, 6:02 PM |
Updated: 27 Aug 2022, 6:02 PM |
Posted By: admin

துபாயின் மிக முக்கிய சுற்றுலாத் தலங்களுள் ஒன்றான குளோபல் வில்லேஜ்-ன் 27வது சீசன் அக்டோபர் 25-ஆம் தேதி துவங்க உள்ளது. இதனை முன்னிட்டு உலகம் முழுவதிலும் இருந்து குளோபல் வில்லேஜிற்கு பார்வையாளர்கள் வருவது வழக்கம். சுற்றுலாப் பயணிகளை வரவேற்கத் தேவையான முழு ஏற்பாட்டையும் செய்துள்ளதாகவும் அதிகமானோர் அமர்வதற்கு கூடுதல் இருக்கைகளை அமைத்துள்ளதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில் பார்வையாளர்களுக்கு பொது விடுமுறை நாட்களைத் தவிர, ஞாயிறு முதல் வியாழன் வரை செல்லுபடியாகும் டிக்கெட்களை ஊக்குவிக்கும் வகையில் ‘ANY DAY’ டிக்கெட் என துவங்கப்பட்டுள்ளது. இந்த டிக்கெட் பொது விடுமுறை நாட்கள் உட்பட, அனைத்து நாட்களிலும் குளோபல் வில்லேஜ்க்குள் செல்லும் வாய்ப்பை பார்வையாளர்களுக்கு வழங்குகிறது.

மேலும், பார்வையாளர்கள் மொபைல் ஆப் அல்லது இணையதளம் மூலம் பெறும் டிக்கெட்டுகளுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்றும் அதன் விலை 18 திர்ஹம்ஸில் இருந்து தொடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT