ADVERTISEMENT

UAE: போக்குவரத்து அபராதத்தில் 50% தள்ளுபடி.. ஷார்ஜாவில் தள்ளுபடி திட்டத்திற்கான காலவரம்பு நீட்டிப்பு..!

Published: 3 Aug 2022, 11:00 AM |
Updated: 3 Aug 2022, 11:00 AM |
Posted By: admin

போக்குவரத்து விதிமீறல்களுக்கான 50 சதவீத தள்ளுபடி ஜூலை 31க்கு பிறகும் தொடரும் என்று ஆர்டிஏ ஷார்ஜா தெரிவித்துள்ளது. இந்த நீட்டிப்பு அக்டோபர் 4, 2022 வரை இருக்கும் என்றும் ஜனவரி 1, 2015 முதல் மார்ச் 31, 2022 வரை வழங்கப்பட்ட அபராதங்களுக்கு தள்ளுபடி பொருந்தும் என்றும் ஷார்ஜா சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் கூறியுள்ளது.

ADVERTISEMENT

பின்வரும் முறைகள் மூலம் அபராதம் செலுத்தலாம்:

  • SRTA இணையதளம் www.srta.gov.ae
  • SRTA ஸ்மார்ட்போன் செயலி
  • அல் அஸ்ராவில் உள்ள SRTA தலைமையகம்
  • கல்பா மற்றும் கோர்ஃபக்கனில் உள்ள SRTA கிளைகள்