சவுதியைச் சேர்ந்த சல்மா அல்-ஷிகாப், பிரிட்டனில் உள்ள லீட்ஸ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ கல்லூரியில் இறுதியாண்டு முனைவர் பட்ட ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். ஷியா முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த சல்மா, சவுதியின் சன்னி முஸ்லிம் ராஜ்ஜியத்தில் உள்ள பாகுபாடுகள் பற்றி குறை கூறி வதுள்ளார்.
இந்நிலையில் சவுதி அரசுக்கு எதிராக ட்விட்டரில் வதந்திகளை பரப்பியதாக சல்மா மீது குற்றம் சாட்டப்பட்டது. கடந்தாண்டு ஜனவரி மாதம் விடுமுறையில் சல்மா சவுதி வந்தபோது அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கு முன்பாக 285 நாட்கள் தனிமை சிறையில் வைக்கப்பட்டார்.
அதன் பின் இவர் மீதான வழக்கு நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த வழக்கில் சல்மாவுக்கு 34 ஆண்டுகள் சிறை தண்டனையும், அதன்பின் 34 ஆண்டுகள் பயண தடையும் விதிக்கப்பட்டுள்ளது.