ADVERTISEMENT

UAE: துபாய் வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு.. RTA-வின் முக்கிய அறிவிப்பு..!

Published: 28 Aug 2022, 7:53 AM |
Updated: 28 Aug 2022, 12:26 PM |
Posted By: admin

துபாயில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல், ஆகஸ்ட் 29, திங்கட்கிழமை நள்ளிரவு வரை, அல் மெய்டன் ரோடு இன்டர்சேஞ்ச் 2 மற்றும் ஃபைனான்சியல் சென்டர் ரோடு இன்டர்சேஞ்ச் இன்டர்சேஞ்ச் 1 இடையே ஷார்ஜாவை நோக்கிய திசையில் ஷேக் சயீத் சாலையில் தாமதம் ஏற்படும் என்று போக்குவரத்து ஆணையம் (RTA) அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து ட்விட்டர் பதிவில், RTA வாகன ஓட்டிகளை கவனமாக ஓட்டவும், இலக்கை அடைய திசை அடையாளங்களைப் பின்பற்றவும் அறிவுறுத்தியது. மேலும் ஷேக் சயீத் சாலையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் காலை 10 மணி வரை இப்னு பட்டுடா மற்றும் அல் சப்கா சாலை இன்டர்சேஞ்ச் இடையே ஷார்ஜாவை நோக்கிய சாலையில் தாமதம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தாமதத்திற்கான காரணம் குறிப்பிடப்படவில்லை.