ADVERTISEMENT

UAE: ஷார்ஜாவில் ஜனவரி 2024 முதல் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை..!

Published: 24 Aug 2022, 10:59 AM |
Updated: 24 Aug 2022, 10:59 AM |
Posted By: admin

ஷார்ஜாவில் ஜனவரி 1, 2024 முதல் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்கள் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு இணங்க அக்டோபர் 1 முதல், அமீரகத்தில் உள்ள விற்பனை நிலையங்கள், நுகர்வோர் கேட்கும் ஒவ்வொரு பிளாஸ்டிக் பைக்கும் 25 ஃபில்ஸ் வசூலிக்க உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

ஜனவரி 1, 2024 முதல், அமீரகத்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை செய்யப்படுவதாக ஷார்ஜா நிர்வாகக் குழுவால் வெளியிடப்பட்ட தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது, அந்த வகையில் பல உபயோகற்கு உகந்த மாற்றுப் பைகள் கடைக்காரர்களுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கபட்டுள்ளது.

அமீரகத்தில் பிளாஸ்டிக் மாசுபாட்டின் அபாயங்களிலிருந்து சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதே தீர்மானத்தின் நோக்கமாகும். இது முற்றிலும் தடைசெய்யப்படும் வரை ஒருமுறை பயன்படுத்தும் பைகளின் பயன்பாட்டைக் குறைப்பதன் மூலம் குடியிருப்பாளர்களிடையே நிலையான கலாச்சாரத்தை ஊக்குவிக்கும். ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பைகளுக்கு பதிலாக நகராட்சி விவகாரங்கள் துறையால் அங்கீகரிக்கப்பட்ட பைகள் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT