அபுதாபியில் உள்ள சைக்கிள் மற்றும் எலக்ட்ரிக் பைக் ஓட்டுநர்கள் விதிகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று அபுதாபியில் உள்ள நகராட்சிகள் மற்றும் போக்குவரத்துத் துறையின் (DMT) ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC) அபுதாபி காவல்துறையின் ஒத்துழைப்புடன் தெரிவித்துள்ளது.
அமீரகத்தில் சைக்கிள் மற்றும் எலக்ட்ரிக் பைக்குகள் அத்தியாவசிய வாகனமாக மாறிவருகிறது, அதன் ஓட்டுநர்கள் போக்குவரத்து விதிகளை மீறாமல் வாகனத்தை இயக்குமாறு ITC தெரிவித்துள்ளது.
அமீரக செய்தி நிறுவனமான WAM இன் படி, “தடைசெய்யப்பட்ட சாலைகள் மற்றும் பகுதிகளில் சைக்கிள் ஓட்டுவது தொடர்பான பாதுகாப்பு உத்தரவுகளை மீறி கடைப்பிடிக்கத் தவறும் ஓட்டுநருக்கு 200 திர்ஹம்ஸ் முதல் 500 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும். எனவே பாதுகாப்பான சமூகத்தை உறுதி செய்வதற்கு குடியிருப்பாளர்களை முடிந்தவரை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்” என்று கூறியுள்ளது.