ADVERTISEMENT

அமீரக பொதுப் பேருந்து நிலையங்களில் வாகனங்களை நிறுத்தினால் என்ன தண்டனை தெரியுமா..?

Published: 22 Aug 2022, 7:45 PM |
Updated: 22 Aug 2022, 7:45 PM |
Posted By: admin

அபுதாபியின் பொதுப் பேருந்து நிறுத்தத்தில் மற்ற வாகனங்கள் நிறுத்துவதை தவிர்க்குமாறு வாகன ஓட்டிகளை போக்குவரத்து அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். இதனை மீறும் வாகன ஓட்டிக்கு 2,000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சமீபத்திய சமூக வகதள பதிவில், நகராட்சிகள் மற்றும் போக்குவரத்துத் துறையின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC) பொதுப் பேருந்துகளுக்காக ஒதுக்கப்பட்ட சாலையோர நிறுத்தத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்று வாகன ஓட்டிகளை வலியுறுத்தியது.

“சாலை பயனர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் மற்றும் மற்றவர்களின் பாதுகாப்பையும் போக்குவரத்தை பராமரிக்க, பேருந்து நிறுத்துமிடங்களில் தங்கள் வாகனங்களை நிறுத்துவதைத் தவிர்க்க வேண்டும்” என்று ITC தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த நடைமுறை போக்குவரத்துக்கு இடையூறு விளைவிப்பதாகவும், சாலையைப் பயன்படுத்துபவர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்துவதாகவும் ITC மேலும் கூறியுள்ளது. எனவே மீறுபவர்களைக் கண்டறிவதற்காக, சமீபத்திய தொழில்நுட்பங்களுடன் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.