துபாயில் கடந்த ஆறு மாதங்களில் மட்டும் டாக்ஸிகளில் பயணித்து தனது உடைமைகளை மறந்து டாக்ஸியிலேயே விட்டுச்சென்ற பலரின் உடைமைகள் கணக்கிலெடுக்கப்பட்டுள்ளன. டாக்ஸிகளில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களில் மொத்தம் 1.2 மில்லியன் திர்ஹம் ரொக்கம், 12,410 மொபைல் போன்கள், 2,819 மின்னணு சாதனங்கள், 766 பாஸ்போர்ட்கள் மற்றும் 342 மடிக்கணினிகள் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் டாக்சிகளில் பயணித்த பயணிகளால் மறந்த பொருட்களில் இவையாகும். இது பற்றி கூறுகையில் துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) கால் சென்டருக்கு ஆறு மாதங்களில் டாக்சிகளில் தொலைந்த பொருட்கள் பற்றிய 44,062 புகார்கள் வந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம், துபாய் டாக்ஸி கார்ப்பரேஷன் (DTC) யில் இருந்து நான்சி ஓர்கோ எனும் நபரை ஒரு பயணி தனது வண்டியில் விட்டுச் சென்ற 1 மில்லியன் திர்ஹம்கள் கொண்ட பையை ஒப்படைத்ததற்காக RTA கெளரவித்தது.
இது பற்றி விவரிக்கையில், “பொதுவாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குறிப்பாக துபாயின் சிறப்புத்தன்மையை சுற்றுலாப் பயணிகள், பார்வையாளர்கள் மற்றும் அமீரகத்தில் உள்ள டாக்ஸிகளைப் பயன்படுத்தும் குடியிருப்பாளர்கள் ஆகியோருக்கு வழங்குவதற்கான அவர்களின் மதிப்புமிக்க முயற்சிகளுக்கு இது ஒரு அடையாளமாகும், ”என்று வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி, கார்ப்பரேட் நிர்வாக ஆதரவு சேவைகள் துறை இயக்குனர் மெஹைலா அல்செஹ்மி கூறியுள்ளார்.