ADVERTISEMENT

UAE: துபாயில் காவல்துறையினருக்கு பயந்து தப்பியோடிய நபரை அறைந்த பாதுகாவலருக்கு சிறை தண்டனை..!

Published: 21 Aug 2022, 2:02 PM |
Updated: 21 Aug 2022, 2:02 PM |
Posted By: admin

துபாயில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது தப்பி ஓட முயன்ற ஒருவரை அறைந்த பாதுகாவலருக்கு சிறை தண்டனையும், நாடு கடத்தும் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. போலீஸ் ரோந்துப் பணியை கண்டு பயந்து ஓடிய நபரை தடுக்க அவரது இடது காதில் அறைந்ததில், இடது காதில் ரத்தம் கொட்டிய நிலையில் கீழே விழுந்தார். இதனை அடுத்து பாதிக்கப்பட்டவர் நிரந்தர காயங்களுக்குள்ளானதோடு குணமடைய சுமார் மூன்று மாதங்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த நிலையில் காயமடைந்த நபர் போலீசாரிடம் இருந்து தப்பிக்கவே தான் ஓடியதாக ஒப்புக்கொண்டார். போலீஸ் வருவதைக் கண்ட பாதுகாவலர் ஒருவர் வழி மறித்ததைக் தப்பிச் செல்ல முயன்றவை தப்பிக்க முடியாமல் அடித்ததாகவும் ஒப்புக்கொண்டார். பின்னர் காவல்துறையினர் கூறுகையில், தப்பி ஓட முயன்ற நபர் ஒரு கொள்ளை வழக்கில் குற்றவாளி என தெரிவித்தனர்.