ADVERTISEMENT

UAE: மீண்டும் வருகிறது துபாய் குளோபல் வில்லேஜ் கண்கவர் கண்காட்சி.. துவக்க நாள் அறிவிப்பு..!

Published: 4 Aug 2022, 8:09 AM |
Updated: 4 Aug 2022, 8:09 AM |
Posted By: admin

துபாயின் மிக முக்கிய சுற்றுலாத் தலங்களுள் ஒன்றான குளோபல் வில்லேஜ்-ன் 27 வது சீசன் அக்டோபர் 5-ஆம் தேதி துவங்க உள்ளது. இதனை முன்னிட்டு உலகம் முழுவதிலும் இருந்து குளோபல் வில்லேஜிற்கு பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுலாப் பயணிகளை வரவேற்கத் தேவையான முழு ஏற்பாட்டையும் செய்துள்ளதாகவும் அதிகமானோர் அமர்வதற்கு கூடுதல் இருக்கைகளை அமைத்துள்ளதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்

ADVERTISEMENT

குளோபல் வில்லேஜ் சர்வதேச சுற்றுலா வாசிகளிடையே பிரபலமானதாகும். இந்த பூங்கா உலகளவில் முதல் 4 பொழுதுபோக்கு இடங்களுள் ஒன்றாக திகழ்கிறது. இது திறக்கப்பட்டதில் இருந்து 90 மில்லியன் பார்வையாளர்கள் வருகைத்தந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஒவ்வொரு சீசனிலும், தனித்துவமான சமையல் சாகசங்களை வழங்கும் 200-க்கும் அதிகமான உணவகங்கள், கஃபேக்கள் மற்றும் street ஃபுட் வகைகள் என உலகின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் மில்லியன் கணக்கானோர் உணவுகளை சாப்பிடும் விதத்தில் அமைக்கப்பட உள்ளது . இந்த சீசன் 27 இல், பூங்காவானது புதிய மற்றும் புதுமையான முறையில் பார்வையாளர்களை திருப்திப்படுத்த அமைக்கப்பட உள்ளது. சாகச விரும்பிகளுக்கு, பூங்கா டிரான்சில்வேனியா டவர்ஸ், மணிலா மேஹம், குளோபல் பர்ஜ் மற்றும் லண்டன் லூப் ரோலர் கோஸ்டர் ஆகியவை மீண்டும் அமைக்கப்பட உள்ளது.

ADVERTISEMENT

குளோபல் வில்லேஜ் சீசன் 27-இல் பலவிதமான கண்கவர் நேரடி கச்சேரிகளுடன், உலகளாவிய கலைஞர்கள் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் பார்வையாளர்களை உற்சாகப்படுத்த காத்துள்ளனர்.