ADVERTISEMENT

அமீரக வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு.. அபுதாயில் பல முக்கிய சாலைகள் மூடப்படுவதாக அறிவிப்பு..!

Published: 27 Aug 2022, 11:43 AM |
Updated: 27 Aug 2022, 11:43 AM |
Posted By: admin

அபுதாபியில் வார இறுதியில் நாட்களில் பல சாலைகள் பராமரிப்பு பணி காரணமாக மூடப்படுவதாக அமீரக போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்து நகராட்சிகள் மற்றும் போக்குவரத்து துறையின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC) அதன் சமூக வலைதளங்களில் பகுதியளவு சாலை மூடல்களை அறிவித்து, வாகன ஓட்டிகள் மாற்றுப்பாதைகளுக்கு கவனமாக செல்லுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

ADVERTISEMENT

முன்னதாக மூடப்பட்ட ஷேக் சயீத் பின் சுல்தான் தெருவின் இரு பகுதியும், சயீத் தி ஃபர்ஸ்ட் ஸ்ட்ரீட் மற்றும் அல் மவ்கிப் ஸ்ட்ரீட் இடையே உள்ள இரண்டு வலதுபுறம் பகுதியும் நேற்று இரவு 11 மணிக்கு திறக்கப்பட்டது. அல் பத்தீன் தெருவின் இடதுபுறப் பாதை, அல் ஃபலாஹ் தெருவில் இருந்து கார்னிச் தெரு வரை உள்ள சாலையும் இன்று அதிகாலை 12 மணி முதல் ஆகஸ்ட் 29 திங்கள் காலை 5 மணி வரை  மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ITC அறிவிப்பின்படி, ஷேக் மக்தூம் பின் ரஷீத் சாலையிலிருந்து (E11) ஷேக்போத் நகருக்கு அருகிலுள்ள பாதை மற்றும் அல் ஷவாமேக் நோக்கிச் செல்லும் இரண்டு இடது பாதைகளும் ஆகஸ்ட் 27 சனிக்கிழமை நள்ளிரவு முதல் ஆகஸ்ட் 29 திங்கள் காலை 5 மணி வரை மூடப்படும்.

ADVERTISEMENT

இதற்கிடையில், ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் சாலையில் (E12) அபுதாபியை நோக்கிய வலது பாதையும், சாதியத் ஐலேண்ட் அல் லஃபான் தெருவும், ஆகஸ்ட் 26 வெள்ளிக்கிழமை இரவு 11 மணி முதல் ஆகஸ்ட் 29 திங்கள் காலை 5 மணி வரை மூடப்படும். மேலும் அபுதாபி-அல் ஐன் சாலையில் (E22) பகுதி சாலையும் மூடப்படும்.  அபுதாபியை நோக்கிய திசையில் உள்ள இடது பாதை ஆகஸ்ட் 26 வெள்ளிக்கிழமை மாலை 3 மணி முதல் ஆகஸ்ட் 28 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் வரை மூடப்படும்.

எனவே வாகன ஓட்டிகளை கவனமாக வாகனட்க்தைஅ இயக்குமாறும், போக்குவரத்து  விதிமுறைகளை மீறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் ITC கேட்டுக் கொண்டுள்ளது.

ADVERTISEMENT