ADVERTISEMENT

அமீரகம்: கோடைகாலத்தில் பெய்த ஆலங்கட்டி மழை..!! சமூக வலைதளத்தில் வைரலான வீடியோ..!!

Published: 21 Aug 2022, 8:04 PM |
Updated: 21 Aug 2022, 8:09 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் கோடைகாலத்தை முன்னிட்டு அதிகளவு வெப்பநிலையானது பதிவாகி வருவது பொதுவானதே. இருந்தபோதிலும் அவ்வப்போது மழையும் பொழிந்து வருகிறது. அதிலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட வெள்ளத்தை யாரும் மறந்திருக்க முடியாது. அப்படியிருக்க  ஞாயிற்றுக்கிழமை (இன்று) அதிகபட்சமாக 48 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருந்தாலும் கூட, அமீரகத்தில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.

ADVERTISEMENT

தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) பகிர்ந்த காணொளியில், அல் வதான் தெருவில் கனமழை பெய்ததையொட்டி, ஒரு நபர் பனிக்கட்டிகளை வைத்திருப்பது காட்டப்பட்டுள்ளது. ராஸ் அல் கைமாவின் வாதி அல் குர் பகுதியில் ஆலங்கட்டி மழை பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT

இதற்கிடையில், நாட்டின் மறுமுனையான அல் தஃப்ரா பிராந்தியத்தில் உள்ள அல் குவைஃபத் மற்றும் பதா தஃபாஸ் ஆகிய இடங்களில் 48 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.