இந்திய அரசு இந்த ஆண்டு தொடக்கத்தில் பண வரம்பு விதிகளை திருத்திய பிறகு, குறிப்பிட்ட சில டெபாசிட்கள் மற்றும் வித்டிராயல்களுக்கு பான் அல்லது ஆதார் எண்ணை கட்டாயமாக்கியது. இது என்ஆர்ஐகளுக்குப் பொருந்துமா? இது தொடர்பாக இந்தியாவின் மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வங்கியில் நடப்புக் கணக்கு அல்லது ரொக்கக் கிரெடிட் கணக்கைத் தொடங்கும் போது, ஒரு நிதியாண்டில் 2 மில்லியனுக்கு (93,041 திர்ஹம்ஸ்) மேலே ரொக்க வைப்பு மற்றும் வித்டிராயல்களுக்கு அனைத்து இந்தியர்களும் பான் அல்லது ஆதார் அட்டையை அளிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவிப்பின்படி, ஒவ்வொரு நபரும், ஒரு பரிவர்த்தனையில் ஈடுபடும் போது, அவரது நிரந்தர கணக்கு எண் பான் அல்லது ஆதார் எண்ணை மேற்கோள் காட்ட வேண்டும். மேலும் அத்தகைய ஆவணங்களைப் பெறும் ஒவ்வொரு நபரும், அந்த எண் முறையாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளதா, அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
முன்னதாக, வருமான வரி விதிகளின்படி, ஒரே நாளில் ரூ.50,000-க்கு மேல் ரொக்க டெபாசிட் செய்யப்பட்டால் PAN கட்டாயமாகத் தேவைப்பட்டது. ஆனால் ரொக்க வைப்புத்தொகைக்கான வருடாந்திர மொத்த வரம்பு இதற்கு முன் வழங்கப்படவில்லை. பணம் எடுப்பதற்கு எந்த வரம்பும் இல்லை, அது இப்போது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரு நிதியாண்டில், ஒரு வங்கிக்கணக்கிலோ அல்லது பல கணக்குகளிலோ ரூ.2 மில்லியன் அல்லது அதற்கும் அதிகமாகப் பணம் டெபாசிட் செய்யும் அல்லது பணம் எடுக்கும் நபர்கள் அனைவரும் பான் அட்டையை அளிக்க வேண்டும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இல்லையெனில், அவர் அத்தகைய பரிவர்த்தனைகளை செய்ய முடியாது. நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளுக்கு மேல் பணம் செலுத்துவது அல்லது பெறுவதும் தவறுதான். இதற்கு செலுத்தப்பட்ட அல்லது பெறப்பட்ட தொகையில் 100 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
PAN இல்லாத நபர்கள், ஒரு நாளைக்கு ரூ.50,000 அல்லது ஒரு நிதியாண்டில் ரூ. 2 மில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகளை செய்வதற்கு குறைந்தபட்சம் ஏழு நாட்களுக்கு முன்பாக PAN க்கு விண்ணப்பிக்க வேண்டும். வெளிநாடு வாழ் இந்தியர்கள் பான் அட்டை தேவைப்படலாம் என்றாலும், ஆதார் வைத்திருக்கும் NRI-களுக்கு இந்த விதி பொருந்தாது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.