லுலு எக்ஸ்சேஞ்ச் அதன் தாய் நிறுவனமான லுலு ஃபைனான்சியல் குழுமத்தின் உலகளாவிய 250-வது மற்றும் புதிய 3 கிளைகள் அமீரகத்தில் திறக்கப்பட்டுள்ளது. 250-வது கிளை துபாயின் சிலிக்கான் சென்ட்ரல் மாலில் திறக்கப்பட்டது, மற்ற இரண்டு கிளைகள் ஷார்ஜாவின் அல் மஜாஸ் (Al Majaz) மற்றும் மாஸா (Maaza) பகுதிகளில் திறக்கப்பட்டது.
இப்புதிய கிளையை ஹோல்டிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அதீப் அகமது மற்றும் மூத்த நிர்வாகிகள் முன்னிலையில், இந்தியத் தூதரகத் தூதர் டாக்டர் அமன் பூரி திறந்து வைத்தார். இது குறித்து கூறிய டாக்டர் பூரி, லுலு பைனான்சியலின் இந்த நிகழ்வு நிறைந்த முக்கியமான தருணத்தில் நான் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அமீரகத்தில் லுலு எக்ஸ்சேஞ்ச் கிளைகளின் நெட்வொர்க், அதன் டிஜிட்டல் கண்டுபிடிப்புகளுடன் இணைந்து, பணம் அனுப்புதல் மற்றும் நாணய பரிமாற்றத் துறையில் பல வழிகளில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் மூலம், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள லுலு எக்ஸ்சேஞ்ச் கிளைகளின் மொத்த எண்ணிக்கை 89 ஆக அதிகரிதுள்ளது.