ADVERTISEMENT

UAE: மஹ்சூஸ் டிராவில் 1 கிலோ தங்கம் வென்று அசத்திய இந்தியர்.. குழந்தைகளின் எதிர்காலத்திற்கு பயன்படுத்த இருப்பதாக தெரிவிப்பு..!

Published: 5 Aug 2022, 6:06 PM |
Updated: 5 Aug 2022, 6:06 PM |
Posted By: admin

துபாய் மஹ்சூஸின் 87வது டிராவில் 1 கிலோ தங்கம் மற்றும் 300,000 திர்ஹம்ஸ் பரிசுகளை இந்தியர்கள் வென்று அசத்தியுள்ளனர். 300,000 லட்சம் திர்ஹம்ஸ் பரிசுத் தொகையை வினு, மணிராஜ் என்ற இருவர்களுக்கு பகிர்ந்து வழங்கப்பட்டது, மேலும் இத்துடன் கோல்டன் சம்மர் புரோமோஷன் என்ற பேரில் 1 கிலோ தங்கத்தை முகமது என்ற இந்தியர் வென்றுள்ளார்.

ADVERTISEMENT

பெங்களூரை சேர்ந்த 42 வயதுடைய முகமது கடந்த 5 வருடங்களாக துபாயில் பணியாற்றி வருகிறார். வெற்றி குறித்து பேசிய முகமது, “தங்கம் வென்றதை என்னால் நம்ப முடியவில்லை, வெற்றிபெற்றதாக மஹ்சூஸ் குழுவிடம் இருந்து அழைப்பு வந்தபோது நான் நம்பவில்லை, பிறகு மஹ்சூஸ் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விசாரித்து உறுதிப்படுத்தினேன். நான் இது குறித்து எனது குடும்பத்தாருக்கு கூட இன்னும் சொல்லவில்லை. எனது குடும்பத்துக்கு பெரும் உதவியாகவும், எனது இரண்டு பெண் பிள்ளைகளின் எதிர்காலத்தை சிறப்பானதாக அமைக்க இந்த தங்கம் எனக்கு உதவும். இந்த தருணத்தில் மஹ்சூஸுக்கு குழுவுக்கு நன்றி கூற நான் கடமைப்பட்டுள்ளேன்” என்று முகமது தெரிவித்தார்.