ADVERTISEMENT

UAE: துபாயில் ஆன்லைனில் நாயை விற்பனை செய்வதாக ஏமாற்றிய 3 பேருக்கு சிறை தண்டனை விதிப்பு..!

Published: 23 Aug 2022, 5:33 PM |
Updated: 23 Aug 2022, 5:33 PM |
Posted By: admin

துபாயில் ஆசியாவை சேர்ந்த 3 பேர் சேர்ந்து இணையத்தளத்தில் வளர்ப்பு நாயை விற்பனை செய்வதாக விளம்பரம் செய்திருந்தனர். இதனை பார்த்த ஒருவர் அதனை வாங்க விருப்பம் தெரிவித்தார். தனது வங்கி கணக்குக்கு பணத்தை அனுப்புமாறு கூறினார். இதனை நம்பி அவர் பணத்தை அனுப்பியுள்ளார். ஆனால் அவர்கள் கூறியபடி வாங்குபவருக்கு நாய் கிடைக்கவில்லை. இதனால் அவர் போலீசில் புகார் அளித்தார்.

ADVERTISEMENT

போலீசார் வழக்கு பதிவு செய்து நாயை விற்பனை செய்வதாக ஏமாற்றிய 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி 3 பேருக்கும் தலா 3 மாதம் சிறைத்தண்டனையும், 4 ஆயிரம் திர்ஹம்ஸ் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் தண்டனைக் காலம் முடிந்த பின்னர் அவர்களை நாடு கடத்தவும் உத்தரவிட்டார்.