ADVERTISEMENT

UAE: மஹ்சூஸ் டிராவில் இரண்டு இந்தியர்களுக்கு அடித்த மெகா ஜாக்பாட்.. 1 லட்சம் திர்ஹம்ஸ் வென்று அசத்தல்..!

Published: 25 Aug 2022, 7:41 AM |
Updated: 25 Aug 2022, 7:41 AM |
Posted By: admin

சமீபத்தில் நடைபெற்ற மஹ்சூஸின் 90வது ரேஃபிள் டிராவில் இரண்டு இந்தியர்கள் தலா 1 லட்சம் திர்ஹம்ஸை வென்று அசத்தியுள்ளனர். 15 வெற்றியாளர்கள் தலா 66,666 திர்ஹம்ஸை பெற்றும், இரண்டாம் பரிசான 1 லட்சம் திர்ஹம்ஸை இரண்டு இந்தியர்கள் பகிர்ந்து கொண்டனர்.
இதன் மூலம் மஹ்சூஸ் டிராவில் இரண்டு ஆண்டுகளில் பங்குபெற்றவர்களில் 27 பேர் மல்டி மில்லியனர்களாக உருவாக்கியுள்ளனர்.

ADVERTISEMENT

வெற்றியாளர்கள் டேவிட் மற்றும் ராபர்ட் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். பயண ஆர்வலரும் இரண்டு பிள்ளைகளின் தந்தையுமான 39 வயதான டேவிட் ஆறு வருடங்களாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வங்கி ஒன்றில் ஐடி மேலாளராக பணியாற்றி வருகிறார். ஆகஸ்ட் 2021 முதல் அவர் நான்கு முறை மட்டுமே மஹ்சூஸ் டிராவில் பங்கேற்றுள்ளார்.

தனது வெற்றியைப் பற்றி அறிந்ததும், மகிழ்ச்சியடைந்த டேவிட், “நான் உற்சாகமாக இருக்கிறேன். மஹ்சூஸ் எனது கனவுகளை நிறைவேற்றியுள்ளது. இந்த வெற்றி எனக்கும் எனது குடும்பத்தாருக்கும் மிக மகிழ்ச்சியை தந்துள்ளது. வெற்றிபெற்ற தொகையில் என்ன செய்வது என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை” இவ்வாறு என்று டேவிட் கூறினார்.

ADVERTISEMENT

மற்றொரு வெற்றியாளரான கவிஞரும் இரண்டு குழந்தைகளின் தந்தையுமான 55 வயதான ராபர்ட் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வருகிறார். துபாயில் உள்ள தனியார் நிறுவனத்தில் நிதி ஆலோசகராக பணிபுரியும் இவர், மஹ்சூஸ் டிராவில் ஆர்வத்துடன் பங்குபெற்று வந்துள்ளார், இது குறித்து கூறிய ராபர்ட், “நான் வெற்றி பெறுவேன் என்று ஒருபோதும் எதிர்பார்த்ததில்லை, வெற்றியாளர்கள் பட்டியலில் எனது பெயர் வந்ததை நம்பமுடியவில்லை, இருப்பினும் நான் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனது வெற்றி எனது குடும்பத்தின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் என நம்புகிறேன்” என தெரிவித்தார்.