ஷார்ஜாவில் உள்ள கொர்ஃபக்கானில் வரும் ஆகஸ்ட் 15 முதல் வாகனங்களுக்கு புதிய கட்டண பார்க்கிங் ஜோன்கள் செயல்படுத்தப்பட இருப்பதாக கொர்ஃபக்கான் நகராட்சி அறிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை வாகனங்களுக்கான பார்க்கிங் இலவசம் என்பதால் வெள்ளிக்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் இந்த கட்டண பார்க்கிங் செயல்படுத்தப்படும் என்றும் நகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வெள்ளிக்கிழமை தவிர்த்து வாரத்தின் மற்ற அனைத்து நாட்களிலும் ஷேக் காலீத் ஸ்ட்ரீட், கார்னிச் ஸ்ட்ரீட், ஷீஸ் பார்க் மற்றும் அல் ரஃபிசா டேமில் உள்ள பார்க்கிங்கில் கட்டணம் செலுத்தி வாகனங்களை நிறுத்திக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
வாகன பார்க்கிங் கட்டண விபரங்கள் பின்வருமாறு:
1 மணி நேரத்திற்கு : 2 திர்ஹம்ஸ்
2 மணி நேரத்திற்கு : 5 திர்ஹம்ஸ்
3 மணி நேரத்திற்கு : 8 திர்ஹம்ஸ்
5 மணி நேரத்திற்கு : 12 திர்ஹம்ஸ்
இருப்பினும் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஷார்ஜா குடிமக்கள் இந்த கட்டண வாகன நிறுத்துமிடங்களை இலவசமாகப் பயன்படுத்த முடியும் என்றும் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த வசதியைப் பெறுவதற்கு, மூத்த குடிமக்கள் சில ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று நகராட்சி தெரிவித்துள்ளது. அவை
- எமிரேட்ஸ் ஐடி
- காரின் உரிமைச் சான்று
- வாகன பதிவு சான்று
இந்த ஆவணங்களை கோர்ஃபக்கான் நகராட்சி இணையதளம் www.khormun.gov.ae வழியாக ஆன்லைனில் சமர்ப்பித்து அல்லது கோர்ஃபக்கனில் உள்ள அல் முதிஃபி பகுதியில் உள்ள தலைமையகத்தில் நேரில் சமர்ப்பித்து மேற்கண்ட சலுகையை பெற்றுக்கொள்ளலாம் எனவும் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.