வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் உள்ள தங்கள் குடும்பத்தினரின் மின்சாரம் மற்றும் தொலைபேசி கட்டணங்களை செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்திய ஊடகத்தின் பிரிவின் அறிக்கையின்படி, பாரத் பில் பேமென்ட் சிஸ்டம் (பிபிபிஎஸ்) என்பது தரப்படுத்தப்பட்ட பில் பேமெண்ட்களுக்கான இயங்கக்கூடிய தளமாகும். அதில் மாதாந்திர அடிப்படையில் 8 கோடி பரிவர்த்தனைகள் செயல்படுத்தப்படுகின்றன.
இது குறித்து இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறுகையில், இந்தியாவில் உள்ள பயனர்களுக்கான பில் செலுத்தும் வாய்ப்பை BBPS ஏற்படுத்த உள்ளது. விரைவில் வெளிநாட்டில் உள்ள பயனர்கள் தங்கள் குடும்பங்கள் சார்பாக பயன்பாட்டு பில்களை வசதியாக செலுத்தலாம். இது குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு பெரிதும் பயன்பெறும் என்றார் அவர்.