ADVERTISEMENT

பாகிஸ்தானில் மழை வெள்ளம்.. நிவாரணம் வழங்கிய ஐக்கிய அரபு அமீரகம்..!

Published: 31 Aug 2022, 8:27 PM |
Updated: 31 Aug 2022, 8:27 PM |
Posted By: admin

பாகிஸ்தானில் வெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு 1000-ஐ தாண்டியுள்ளது. ஜூலை 14-ஆம் தேதி முதல் பெய்து வரும் கனமழையின் காரணமாக பாகிஸ்தானின் தெற்கு மற்றும் தென்மேற்கு பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

அந்நாட்டு தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் சில பகுதிகளில் கனமழை பெய்து வருவதன் காரணமாக, கடந்த 24 மணி நேரத்தில் 119 போ் உயிரிழந்துள்ளனா். இதுவரையில், 1,033 போ் உயிரிழந்துள்ளனா். 1,527 போ் காயமடைந்துள்ளனா் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் 3,451 கி.மீ. சாலைகள், 147 பாலங்கள், 170 கடைகள், 9 லட்சத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபா் ஷேக் முகமது பின் சையது அல் நஹ்யான் பாகிஸ்தானுக்கு நிவாரண உதவிகளை வழங்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அமீரகத்தின் நிவாரண உதவியில் 3,000 டன் உணவுப் பொருட்கள், மருத்துவப் பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் பாகிஸ்தானுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும் பாகிஸ்தானுக்கு உதவும் வகையில் அமெரிக்கா 16 கோடி டாலரும், பிரிட்டன் 15 லட்சம் பவுண்டுகளும் வழங்க முடிவு செய்துள்ளன. ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி, ஈரான் ஆகிய இஸ்லாமிய நாடுகளும் மனிதாபிமான அடிப்படையில் பாகிஸ்தானுக்கு தேவையான உதவியை வழங்கிவதாக உறுதியளித்துள்ளது.