ADVERTISEMENT

UAE: பயணிகளுக்கு இலவச பயணத்தை அறிவித்த துபாய் மெட்ரோ.. சேவை நேரமும் நீட்டிப்பு..!

Published: 27 Aug 2022, 8:39 AM |
Updated: 27 Aug 2022, 8:39 AM |
Posted By: admin

துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) மெட்ரோ சேவைகளை வார இறுதி நாட்களில் இரண்டு மணி நேரம் நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. இது குறித்து RTA டிவிட்டர் பதிவில், ஆகஸ்ட் 27 மற்றும் 28 ஆம் தேதிகளில், மெட்ரோ சேவைகள் நள்ளிரவு முதல் மறுநாள் அதிகாலை 2 மணி வரை நீட்டிக்கப்படும். இந்த நேரங்களில் துபாய் விமான நிலையத்தின் TERMINAL 3 இலிருந்து சென்டர் பாயின்ட் மெட்ரோ நிலையம் வரை பயணிகள் இலவசமாக பயணிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது.

ADVERTISEMENT

கோடை விடுமுறை மற்றும் பள்ளி விடுமுறைகள் முடிவடைந்துள்ளதால் விமான நிலையத்திலிருந்து போக்குவரத்துக்கான அதிக தேவையை எதிர்பார்த்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக RTA-வின் மேலதிகாரி தெரிவித்தார். அதுபோல பயணிகள் டாக்சிகள் போன்ற பொது போக்குவரத்து மூலமாகவும் தங்கள் பயணத்தைத் தொடரலாம் என்று RTA மேலும் கூறியுள்ளது.