ADVERTISEMENT

உலகளவில் புலம்பெயர்ந்தோருக்கான 3வது சிறந்த நாடாக திகழும் சவுதி அரேபியா..!

Published: 25 Aug 2022, 1:27 PM |
Updated: 25 Aug 2022, 1:27 PM |
Posted By: admin

உலக நாடுகளில் சர்வதேச புலம்பெயர்ந்த மக்கள் அதிகம் வாழும் மூன்றாவது சிறந்த நாடாக சவுதி அரேபியா உள்ளது. ஐக்கிய நாடுகளின் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (IOM) வெளியிட்ட உலக இடம்பெயர்வு அறிக்கை 2022 இன் படி, 13.5 மில்லியன் வெளிநாட்டினரை சவுதி வேலை செய்ய ஈர்ப்பதன் மூலம் வணிகம் மற்றும் முதலீட்டிற்கான உலகளாவிய இடமாக மாறியுள்ளது.

ADVERTISEMENT

1970 ஆம் ஆண்டு முதல், சர்வதேச புலம்பெயர்ந்தோரின் முக்கிய நாடாக அமெரிக்கா உள்ளது என்று அறிக்கை மூலம் தெரியவந்தது. அமெரிக்காவில் வசித்துகொண்டு வெளிநாட்டில் பிறந்தவர்களின் எண்ணிக்கை 1970 இல் 12 மில்லியனுக்கும் குறைவாக இருந்ததில் இருந்து தற்போது அதைவிட நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. அதன்படி 2019 ஆம் ஆண்டில் 50.6 மில்லியன் மக்கள் அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்துள்ளனர். புலம்பெயர்ந்தோருக்கான இரண்டாவது முக்கிய நாடாக ஜெர்மனி உள்ளது, அங்கு 2000 ஆம் ஆண்டில் 8.9 மில்லியனிலிருந்து 2020 இல் 16 மில்லியன் மக்கள் புலம்பெயர்ந்துள்ளனர்.

அந்த வரிசையில் சவுதி அரேபியா 13.5 குடியேறிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது, அதைத் தொடர்ந்து ரஷ்யா, UK, பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கனடா ஆகிய நாடுகள் உள்ளன.

ADVERTISEMENT

2030 ஆம் ஆண்டுக்குள் சவுதி அரேபியாவின் மக்கள்தொகை 50 மில்லியனுக்கும் அதிகமாகவும், 25 மில்லியன் குடிமக்கள் மற்றும் அதே எண்ணிக்கையிலான 25 மில்லியன் வெளிநாட்டினர் சவுதிக்கு குடியேற விரும்புவதாக அந்நாட்டு பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் முன்பு கூறியது குறிப்பிடத்தக்கது.