ADVERTISEMENT

UAE: லண்டன் வீதிகளில் என்ஜாய் செய்யும் துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான்.. வைரலாகும் புகைப்படங்கள்..!

Published: 16 Aug 2022, 5:40 PM |
Updated: 16 Aug 2022, 5:40 PM |
Posted By: admin

துபாய் பட்டத்து இளவரசரான மாண்புமிகு ஷேக் ஹம்தன் பின் முகமது அல் மக்தும் லண்டனில் தெருக்களிலும், பொதுப் போக்குவரத்துகளிலும் சுற்றித் திரியும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. சில அரபு நாடுகளின் மன்னர்கள், இளவரசர்கள் சமீப காலமாக ஐரோப்பிய நாடுகளில் நாட்களை செலவளித்து மகிழ்ச்சியுடன் இருந்து வருகின்றனர்.

ADVERTISEMENT

அந்த வகையில் தான் ஐக்கிய அரபு அமீரகத்தில் இளவரசரான ஷேக் ஹம்தான் பல நாடுகளுக்கு சற்றுலா செல்வது போன்று சென்று வருகிறார். ஷேக் ஹம்தன் பின் முகமத் அல் மக்தும் வெளிநாடு செல்லும்போது தனது அரசுக் குடும்பம் தொடர்பான சில வரைமுறைகளுடன் செல்லாமல் அந்தந்த நாடுகளுக்கு ஏற்ற உடைகளில் வலம் வருகிறார்.

தற்போது ஷேக் ஹம்தன் பின் முகமத் அல் மக்தும் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து லண்டனுக்கு சுற்றுப் பயணம் சென்றிருக்கிறார். அங்கு அவர் பொதுமக்கள் மத்தியில் சாதாரண உடைகளில் உலாவும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இப்புகைப்படங்களை இளவரசரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். தற்போது அந்தப் புகைப்படங்கள்தான் வைரலாகி வருகின்றன. ஷேக் ஹம்தன் பின் முகமத் அல் மக்துமை இன்ஸ்டாகிராமிவில் 14 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT