ADVERTISEMENT

UAE: துபாய் – பெங்களூரு இடையே மிகப்பெரிய எமிரேட்ஸ் விமானம் இயக்க இருப்பதாக அறிவிப்பு..!

Published: 18 Aug 2022, 10:00 AM |
Updated: 18 Aug 2022, 10:00 AM |
Posted By: admin

துபாயின் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் சார்பில் உலகின் மிகப்பெரிய விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மும்பை-துபாய் இடையே கடந்த 2014-ம் ஆண்டு முதல் மிகப்பெரிய விமானம் இயக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில் பெங்களூரு-துபாய் இடையிலும் இந்த மிகப்பெரிய விமானத்தை இயக்க எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் முடிவு செய்து உள்ளது. இந்த விமானம் துபாயில் இருந்து வருகிற அக்டோபர் மாதம் 30-ம் தேதி இரவு பெங்களூருவுக்கு வருகிறது.

31-ந் தேதி பெங்களூருவில் இருந்து துபாய்க்கு தனது முதல் பயணத்தை தொடங்க உள்ளது. இந்த விமானத்தின் நீளம் 79.80 மீட்டர் ஆகும். ஏ380 என்று அழைக்கப்படும் இந்த விமானத்தில் 500 இருக்கைகள் இருக்கும். பொருளாதாரம், வணிக இருக்கைகளும் இந்த விமானத்தில் இடம் பெற்றுள்ளது. முதல் வகுப்பில் தனி அறைகள், மசாஜ் சென்டர் உள்ளிட்ட வசதிகள் உள்ளதாக விமான நிறுவனம் கூறியுள்ளது.

ADVERTISEMENT