ADVERTISEMENT

UAE: அல் ஐனில் புகைப்படம் எடுத்துக்கொண்டே வாகனத்தை கால்வாயில் விட்ட ஓட்டுநர் விபத்து..!

Published: 4 Aug 2022, 2:59 PM |
Updated: 4 Aug 2022, 2:59 PM |
Posted By: admin

அல் ஐன் பகுதியில் உள்ள வாடி சாயில் புகைப்படம் எடுக்க முயன்ற வாகன ஓட்டி ஒருவர் தடுமாறி சாலைக்கு வெளியில் விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். அபுதாபி காவல்துறையினர் நீரிலிருந்து மீன்பிடித்துக் கொண்டிருந்ததை, வாகன ஓட்டி ஒருவர் வாகனத்தை ஓட்டியவாறு புகைப்படம் எடுத்துள்ளார், அப்போது தடுமாறி சாலைக்கு அருகே இருந்த நீரில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளார்.

ADVERTISEMENT

அமீரகத்தில் பெய்த மழை காரணமாக வெள்ளம் சூழ்ந்த பள்ளத்தாக்குகள் அருகில் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்றும் அணைகளிலிருந்து விலகிச் செல்லுமாறும் அபுதாபி காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது. அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக அதிகாரிகளின் அறிவுரைகளை பின்பற்றுமாறு பொதுமக்களை காவல்துறை வலியுறுத்தியுள்ளது. சாலையில் வாகனம் ஓட்டும்போது கவனம் சிதறும் நடவடிக்கைகளை ஈடுபடுவதை தவிர்த்து ஆபத்துகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ளுமாறு போலீசார் எச்சரித்தனர்.