மஹ்சூஸின் 91வது வாராந்திர டிரா சனிக்கிழமை அன்று நடைபெற்றது. இதில் 2,053 பங்கேற்பாளர்கள் 1,993 திர்ஹம்ஸை தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர். இரண்டாவது பரிசாக 1 லட்சம் வழங்கப்பட்டது, இதை 73 பங்கேற்பாளர்கள் தலா 13,698 திர்ஹம்ஸாக பகிர்ந்து கொண்டனர், மூன்றாம் பரிசாக 1,980 வெற்றியாளர்கள் தலா 350 திர்ஹம்ஸை பகிர்ந்து கொண்டனர்.
மஹ்ஸூஸ் வாராந்திர ரேஃபிள் டிராக்கள் ஒவ்வொரு வாரமும் மூன்று பங்கேற்பாளர்கள் தங்களுக்குள் 300,000 திர்ஹம்ஸை பகிர்ந்து கொள்கிறார்கள். இந்த வாரம் இந்தியாவைச் சேர்ந்த காதர் மற்றும் ஆஷித் மற்றும் நைஜீரியாவைச் சேர்ந்த அப்னர் ஆகியோர் வெற்றி பெற்று பகிர்ந்து கொண்டுள்ளனர்.
மஹ்சூஸ் டிரா துவக்கத்தில் இருந்து 185,000 வெற்றியாளர்களுக்கு 260,000,000 திர்ஹம்ஸுக்கும் மேல் வழங்கியுள்ளது. இந்த நிலையில் இரண்டாவது மஹ்சூஸ் கோல்டன் சம்மர் டிரா செப்டம்பர் 3, 2022 அன்று நடைபெற உள்ளது. இந்த டிராவின் ஒரு பகுதியாக, வெற்றியாளர் ஒருவருக்கு ஒரு கிலோ தங்கம் பரிசாக வழங்கப்படுகிறது.