FIFA 2022 உலகக் கோப்பை கால்பந்து கத்தாரில் நடைபெற உள்ள நிலையில் அமீரகம் பல நுழைவு சுற்றுலா விசாக்களை அறிவித்துள்ளது. நவம்பர் முதல் உலகக் கோப்பைப் போட்டிகள் நடக்க இருப்பதால், அதன் தனிப்பட்ட ஆவணமான ‘ஹய்யா’ (HAYYA) அட்டை வைத்திருப்பவர்களுக்கு நவம்பர் 20 முதல் டிசம்பர் 18 வரை புதிய விசா வழங்கப்படும் என்று அமீரக அரசு அறிவித்துள்ளது.
இந்த சிறப்பு விசா மூலம், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு உலகக் கோப்பை ரசிகர்கள் 90 நாட்களுக்குள் பல முறை வந்து செல்லலாம். இது குறித்து ஃபெடரல் அத்தாரிட்டி ஃபார் ஐடென்டிட்டி (Federal Authority For Identity) , குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுகப் பாதுகாப்பு (Citizenship, Customs and Port Security), விசா கட்டணம் ஒரு முறை 100 திர்ஹம்ஸ் என்றும் அதனை 90 நாட்களுக்கு நீட்டிக்க அனுமதி இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் ‘HAYYA’ அட்டை வைத்திருப்பவர்கள் நவம்பர் 1 முதல் விசாவிற்கு விண்ணப்பித்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வருகை தரலாம். விசா விலக்கு அளிக்கப்பட்ட நாடுகளின் குடிமக்கள் மேற்கூறிய நடைமுறைகளில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர், ஏனெனில் அவர்கள் தற்போதுள்ள விதிகளின்படி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரலாம்.
விண்ணப்பிப்பது எப்படி:
புதிய நுழைவு சுற்றுலா விசாவிற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது குறித்து அமீரக மீடியா ஆஃபிஸ் பட்டியலிட்டுள்ள வழிகள்முறைகள் இதோ:
- ICP இணைய போர்ட்டலை அணுகவும் (www.icp.gov.ae)
- “Smart Channels” இணைப்பைத் தேர்ந்தெடுக்கவும்.
- பிரதான மெனுவிலிருந்து “Public Services” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்படிவத்தைப் பெற பொதுச் சேவைகளில் இருந்து “Hayya Card Holders Visa” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ரூம் கட்டணம் உயர்வு:
அமீரகத்தில் ஹோட்டல் மற்றும் ஹோம்ஸ்டே ஆபரேட்டர்கள், கத்தாரில் நடைபெறும் கால்பந்து உலகக் கோப்பை விளையாட்டு நிகழ்வின் தேவை காரணமாக ரூம்களின் விலை 20 சதவீதம் அதிகரித்துளள்ளதாக தெரிவித்துள்ளனர்.
“கத்தாரில் இருந்து துபாய்க்கு விமானத்தில் 30 நிமிட தூரத்தில் உள்ளதால், மக்கள் துபாயில் தங்கி கத்தாருக்குச் சென்று விளையாட்டுகளைப் பார்க்க விரும்புகிறார்கள்” என்று டார் அல் ஜைன் வெக்கேஷன் ஹோம்ஸ் ரெண்டலின் லைக் ஹோம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சயீத் அல் ஜுபைடி தெரிவித்தார்.
ஏர் அரேபியா மற்றும் FLY DUBAI உள்ளிட்ட அமீரக விமான நிறுவனங்கள் போட்டிகளுக்கு செல்லுபடியாகும் டிக்கெட் உள்ள பயணிள் மட்டுமே இந்த விமானங்களில் செல்ல முடியும்.