அமீரக ஃபெடரல் அரசு ஊழியர்கள், பள்ளியின் முதல் வாரத்தில் தங்கள் குழந்தைகளை ஆதரிக்க நெகிழ்வான வேலை நேரத்தை தேர்வு செய்யலாம் என்று அமைச்சகங்களுக்கு வெளியிடப்பட்ட ஒரு புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது . ஒரு மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் அடுத்த வாரம் பள்ளிகளுக்குத் திரும்ப இருப்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அரசு மனித வளங்களுக்கான மத்திய ஆணையமான (FAHR) அறிவித்துள்ளது.
அதன் சுற்றறிக்கையில், பள்ளிக் குழந்தைகளுடன் கூட்டாட்சி நிறுவனங்களின் ஊழியர்கள் வேலைக்கு தாமதமாகச் செல்லவும், பள்ளியின் முதல் நாளில் சீக்கிரம் வெளியேறவும் அனுமதி அளிக்கப்பபடும். இதைச் செய்வதற்கான மொத்த நேரம் ஒரு நாளைக்கு மூன்று மணிநேரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். வெவ்வேறு பள்ளிகள் வெவ்வேறு தொடக்கத் தேதிகளைக் கொண்டிருப்பதை நிறுவனங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் மற்றும் அதற்கேற்ப நேரங்களை நீட்டிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், நர்சரிகள் மற்றும் மழலையர் பள்ளிகளில் குழந்தைகளைக் கொண்ட பெற்றோர்கள் முதல் பள்ளி வாரத்திற்கு ஒரே மாதிரியான நெகிழ்வுத்தன்மையை மேற்கொள்ள வேண்டும். இதைச் செய்வதற்கான மொத்த நேரம் ஒரு நாளைக்கு மூன்று மணிநேரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். குறிப்பாக வேலை நேரத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில் நெகிழ்வான வேலை நேரத்தை பயன்படுத்தப்பட வேண்டும்.
பெற்றோர்-ஆசிரியர் சந்திப்புகள், பட்டமளிப்பு விழாக்கள் போன்றவற்றை உள்ளடக்கிய 2018 தீர்மானத்தின்படி, குழந்தைகளின் பள்ளி நடவடிக்கைகளில் மூன்று மணிநேரம் வரை ஃபெடரல் ஊழியர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக சுற்றறிக்கையில் உள்ளது.