ADVERTISEMENT

UAE: இந்திய சுதந்திர தின கொண்டாட்டமாக 10,000 பொருட்களுக்கு 3 நாள் விளம்பரத்தை அறிவித்துள்ள லுலு நிறுவனம்..!

Published: 16 Aug 2022, 3:09 PM |
Updated: 16 Aug 2022, 3:20 PM |
Posted By: admin

இந்தியாவின் சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், அமீரகத்தை தளமாகக் கொண்ட லுலு குரூப் இன்டர்நேஷனல், GCC நாடுகளில் உள்ள அதன் 235 ஹைப்பர் மார்க்கெட்களில் 10,000க்கும் மேற்பட்ட இந்திய தயாரிப்புகளில் மூன்று நாள் விளம்பரங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

அபுதாபியில் உள்ள அல் வஹ்தா மாலில் ‘இந்தியா உத்சவ்’ நிகழ்ச்சியை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய தூதர் சுஞ்சய் சுதிர் தொடங்கி வைத்தார். “இந்த வரலாற்று சிறப்புமிக்க நாளில், லுலு குழுமத்தின் ‘இந்தியா உத்சவ்’ கொண்டாடப்படுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார். மேலும் லுலு குரூப் இன்டர்நேஷனலின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான யூசுபலி இந்திய அரசின் ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த கொண்டாட்டங்கள் நடைபெற்றதாக கூறினார்.

இந்த வகையில் பழங்கள், காய்கறிகள், மசாலாப் பொருட்கள், இறைச்சி, உணவு, உணவு அல்லாத பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் மிகப்பெரிய நிறுவனங்களில் லுலு குழுமம் ஒன்றாகும், இவை அனைத்தும் மூன்று நாள் விழாவின் ஒரு பகுதியாக இருக்கும்.

ADVERTISEMENT

“இந்தியா ஒரு வளர்ந்து வரும் பொருளாதார வல்லரசாகும், மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு வெளியுறவுக் கொள்கையானது வலுவான இந்தியா-GCC உறவுகளுக்கு வழிவகுக்கிறது. ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவின் உறுதியான வணிக கூட்டாளிகளின் ஒன்றாக வளர்ந்து வருகிறது. இந்தியாவின் எதிர்காலம் குறித்த இந்த பார்வையில் லுலு குழுமம் ஒரு முக்கிய பங்காற்ற முடியும் என்று உறுதியாக நம்புகிறேன்,” என்று லுலு நிறுவனர் யூசுப் அலி கூறினார்.

வேலைகளை உருவாக்கி, வாழ்வாதாரத்தை ஆதரித்து, பொருளாதார நடவடிக்கைகளை உயர்த்துவதன் மூலம் இந்தியர்களுக்கு யூசுப் அலி ஒரு வெற்றிகரமான உதாரணம் என்று சுதிர் கூறினார்.

ADVERTISEMENT

“லுலு குழுமம் எப்போதும் தங்கள் ஹைப்பர் மார்க்கெட்டுகளில் இந்திய தயாரிப்புகளை ஊக்குவிப்படுத்துவதற்கு நான் நன்றி கூறுகிறேன். இது போன்ற முன்முயற்சிகள் இந்தியாவிற்கும் அமீரகத்திற்கும் இடையிலான வர்த்தக உறவுகளை மேலும் மேலும் மேம்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை,” என்று தூதர் சுட்டிக்காட்டினார்.

‘இந்தியா உத்சவ்’ நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, லுலு ஹைப்பர் மார்க்கெட்டுகள் உணவு மற்றும் உணவு அல்லாத பொருட்கள் உட்பட 10,000க்கும் மேற்பட்ட இந்திய தயாரிப்புகளில் சிறப்பு விளம்பரங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

“தயாரிப்பு ஊக்குவிப்பு தவிர, இந்தியா உத்சவ் பிரச்சார காலத்தில் பல நிகழ்ச்சிகள், போட்டிகள் மற்றும் பிரபலங்களின் வருகைகள் மூலம் இந்தியாவின் வளமான கலாச்சார பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும்” என்று லுலு குழுமத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் தகவல் தொடர்பு இயக்குனர் வி.நந்தகுமார் மேலும் கூறினார்.