துபாய் பிரபலமான சுற்றுலா தலமாக இருப்பதால் வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் இருந்து மில்லியன் கணக்கான சுற்றுலாப் பயணிகளை வருகை தருகின்றனர். இருப்பினும் ஒவ்வொரு நாட்டுனருக்கும் வெவ்வேறு விசா விதிகள் பொருந்தும். அவர்களில் சிலர் வருகையின் போது விசாவைப் பெறுகிறார்கள், மற்றவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பறப்பதற்கு முன் விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதன் அடிப்படையில் ஏறக்குறைய 70 நாடுகளின் குடிமக்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வருகையின் போது ஆன் அரைவல் விசாவைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் மெக்சிகன் பாஸ்போர்ட் வைத்திருக்கும் பயணிகள் 180-நாள் வருகை விசாவிற்கு தகுதியுடையவர்கள், இந்த விசா வழங்கப்பட்ட நாளிலிருந்து ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும்.
ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவிலிருந்து மற்ற அனைத்து நாட்டு பயணிகளும் புறப்படுவதற்கு முன் அமீரகத்தின் விசாவைக் கொண்டிருக்க வேண்டும்.