அமீரக ரெசிடென்சி விசா வைத்திருக்கும் குடியிருப்பாளர்கள் நாட்டைவிட்டு வெளியே 6 மாதத்திற்கு மேல் தங்கியிருந்தால் அவர்களது விசா கேன்ஸல் செய்ய்ப்படும். இவ்வாறு ஆகும்பட்சத்தில் அத்தகையோர்கள் புதிய விசா எடுத்துக்கொண்டு அமீரகத்திற்கு வரலாம்.
இந்த நடைமுறையில் அமீரக அரசு குறிப்பிட்ட குழுக்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும் என அறிவித்துள்ளது. அதாவது 6 மாதத்திற்கும் அதிகப்படியான நாட்கள் அமீரகத்திற்கும் வெளியே தங்கியிருந்தாலும் அவர்களது ரெசிடென்சி விசா கேன்சல் ஆகாது.
அமீரக அரசால் கூறப்பட்டுள்ள அந்த குழுக்கள் எவை?
- அமீரக கணவனால் ஸ்பான்சர் செய்யப்படும் வெளிநாட்டைச் சேர்ந்த மனைவி.
- தனது ஓனரால் சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு அனுப்பப்படும் அரசுப் பணியாளர்கள். இவர்கள் சுகாதாரம் மற்றும் தடுப்பு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் அல்லது மற்ற சுகாதார அதிகாரிகளால் வழங்கப்பட்ட மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
- வெளிநாட்டில் படிக்கும் மாணவர் அல்லது வெளிநாட்டில் சிகிச்சை பெறும் ஒருவருடைய வீட்டுப் பணியாளர்கள்.
- வெளிநாட்டில் அமீரகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தூதரக மற்றும் தூதரகப் பணியாளர்களுடைய வீட்டுப் பணியாளர்கள், அமீரகத்தில் குடியிருப்பு விசாவைக் கொண்ட தூதரக / துணைத் தூதரக ஊழியர்கள்.
- பயிற்சி அல்லது சிறப்புப் படிப்புகளில் கலந்துகொள்வதற்காக தங்கள் முதலாளியால் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட பொதுத்துறை ஊழியர்கள்.
- வெளிநாட்டில் உள்ள முதலாளிகளின் அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்.
- அமீரகத்தில் வசிக்கும் மாணவர் வெளிநாட்டில் இருக்கும் பல்கலைகழகத்திற்கு சென்று படிக்கையில் விசா ரத்தாகாது.
இதில் குறிப்பிடப்பட்டவர்கள் அமீரகத்தை விட்டு வெளியே 6 மாதங்கள் தங்கியிருந்தால் அவர்களது விசா கேன்சல் செய்யப்படமாட்டாது. மற்றவர்கள் 6 மாதத்திற்கு மேல் அமீரகத்தை விட்டு வெளியே தங்கையிருந்தால் அவர்களது விசாவும் கேன்ஸல் செய்யப்படும்.