ADVERTISEMENT

UAE: துபாய் எக்ஸ்போ சிட்டிக்கு செப்டம்பர் 1 முதல் பார்வையாளர்களுக்கு அனுமதி..!

Published: 30 Aug 2022, 7:56 AM |
Updated: 30 Aug 2022, 7:56 AM |
Posted By: admin

துபாய் எக்ஸ்போ சிட்டி அக்டோபர் மாதம் மறுதுவக்கம் செய்யப்பட உள்ள நிலையில் செப்டம்பர் 1 வியாழன் முதல் பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. இது குறித்து எக்ஸ்போ ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், இந்த நடவடிக்கை “எக்ஸ்போ சிட்டி பயணத்தின் முதல் அத்தியாயம்” என்று தெரிவித்தனர்.

ADVERTISEMENT

செப்டம்பர் 1 வியாழன் முதல் துபாய் எக்ஸ்போ சிட்டிக்கு பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்க உள்ள நிலையில் இரண்டு பெவிலியன்களுக்கான டிக்கெட்டுகள் 50 திர்ஹம்ஸுக்கு www.expocitydubai.com என்ற இணையதளத்தில் கிடைக்கும். மேலும் வியாழன் முதல் எக்ஸ்போ சிட்டியில் உள்ள நான்கு பாக்ஸ் ஆபிஸிலும் டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம்.

ADVERTISEMENT

இந்த எக்ஸ்போ சிட்டியில் கார்டன் இன் தி ஸ்கை (Garden in the Sky), 360 டிகிரி காட்சிகளுக்கு 30 திர்ஹம்ஸும், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் அலிஃப் மற்றும் டெர்ரா தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையிலும், கார்டன் இன் தி ஸ்கை (Garden in the Sky) பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரையிலும், செப்டம்பர் 16 வெள்ளிக்கிழமையில் இருந்து காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும் எக்ஸ்போ சிட்டியில் (Al Wasl Plaza) அல் வாஸ்ல் பிளாசா, ( Surreal water feature) சர்ரியல் வாட்டர் ஃபீச்சர், (Women’s Pavilion) பெண்கள் பெவிலியன் மற்றும் (Vision Pavilion) விஷன் பெவிலியன், குழந்தைகளுக்கான விளையாட்டு மைதானங்கள் போன்ற விளையாட்டு தளங்கள் அக்டோபர் 1 முதல் திறக்கப்பட உள்ளது.

இந்த மாத தொடக்கத்தில், எக்ஸ்போவின் மையப் பகுதியான (Al Wasl Plaza) அல் வாஸ்ல் பிளாசா, (Dezeen Awards) டீஸீன் விருதுகள் 2022-க்காக பட்டியலில் இடம்பெற்றுள்ளடு குறிப்பிடத்தக்கது.