ADVERTISEMENT

அபுதாபி விபத்து: மருத்துவமனை நுழைவாயிலில் மோதிய கார்.. 2 பேர் உயிரிழப்பு.. ஒருவர் படுகாயம்..!!

Published: 28 Sep 2022, 5:05 PM |
Updated: 28 Sep 2022, 6:26 PM |
Posted By: admin

அபுதாபியில் இன்று காலை மருத்துவமனை நுழைவாயிலில் கார் மோதிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அபுதாபியில் உள்ள கிளீவ்லேண்ட் கிளினிக் நுழைவாயிலில் உள்ள கான்கிரீட் தூண் மீது இன்று (புதன்கிழமை) காலை வாகனம் ஒன்று மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் ஒருவர் பலத்த காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை அபுதாபி காவல்துறையின் போக்குவரத்து மற்றும் ரோந்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த சம்பவம் குறித்து தெரிவிக்கையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்துக்குள்ளாகி மருத்துவமனை நுழைவாயிலில் உள்ள தூணில் மோதியதாக காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், காயமடைந்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் விவரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை. அத்துடன் அபுதாபி காவல்துறை இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்ததோடு, காயமடைந்த நபர் விரைவில் குணமடையவும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த சம்பவத்தையடுத்து விபத்துகளை தவிர்க்கும் வகையில் வாகன ஓட்டிகள் கவனமாகவும், போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்து வாகனங்களை ஓட்டுமாறும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் அதிகாரப்பூர்வமான செய்திகள் மற்றும் தகவல்களைப் பெறவும், தவறான தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்கவும் பொதுமக்களை காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

எங்களின் செய்திகளை #Youtube வழியாகவும் தெரிந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள் @khaleejtamil என்ற #Youtube பக்கத்தை #Subscribe செய்து கொள்ளுங்கள்.

ADVERTISEMENT