ADVERTISEMENT

UAE: ஹோட்டல் மற்றும் நிகழ்வுகளின் போது பின்பற்ற வேண்டிய புதுப்பிக்கப்பட்ட விதிகளை அறிவித்த அபுதாபி..!!

Published: 28 Sep 2022, 3:04 PM |
Updated: 28 Sep 2022, 5:59 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகம் தனது கொரோனா பாதுகாப்பு விதிகளை தளர்த்தியுள்ள நிலையில், அபுதாபி கலாச்சார மற்றும் சுற்றுலா துறை (DCT) ஹோட்டல் மற்றும் சுற்றுலா நிறுவனங்கள், நிகழ்வுகள் மற்றும் கலாச்சார மற்றும் ஓய்வு இடங்களில் (cultural and leisure venues) பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை புதுப்பித்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும் இந்த புதிய நடவடிக்கைகள் உடனடியாக நடைமுறைக்கு வரும் என்றும் ஆணையம் அத்தகைய இடங்களின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது. அதன்படி புதுப்பிக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

>> அபுதாபியில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு கிரீன் பாஸ் அமைப்பு பொருந்தும். அதாவது நிகழ்வுகளில் கலந்துகொள்பவர்கள் AlHosn செயலியில் கிரீன் பாஸைக் காட்ட வேண்டும். மேலும் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தேவைப்படும் இடங்களில் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்தலாம்.

ADVERTISEMENT

>> கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் மற்றும் தடுப்பூசி போடுவதில் இருந்து விலக்கு பெற்றவர்களுக்கு அல் ஹோஸ்ன் கிரீன் பாஸ் 30 நாட்களுக்கு செல்லுபடியாகும். தடுப்பூசி போடாத நபர்களுக்கு 7 நாட்கள் செல்லுபடியாகும்.

>> வீட்டிற்குள்ளேயும் வெளியிலும் முக கவசங்களை அணிவது இப்போது கட்டாயமில்லை. விருப்பப்பட்டால் போட்டுக்கொள்ளலாம். இருப்பினும், ஃபுட் டெலிவரி செய்பவர்கள், கொரோனா இருக்கும் என சந்தேகப்படும் நபர்கள் மற்றும் கொரோனா பாதித்த நபர்களுக்கு முக கவசம் கட்டாயமானது மற்றும் நாள்பட்ட நோய் மற்றும் வயதானவர்களுக்கு முக கவசம் அணிய பரிந்துரைக்கப்படுகிறது.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து “இந்த விதிகளுக்கு இணங்குவதை சரிபார்க்க மேலே குறிப்பிடப்பட்ட நிறுவனங்கள் DCT அபுதாபி இன்ஸ்பெக்டர்களால் சரிபார்க்கப்படும்” என்று ஆணையம் கூறியுள்ளது.

அமீரகத்தில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளில் அறிவிக்கப்பட்ட பெரும் தளர்வுகளின் ஒரு பகுதியாக, மருத்துவ மையங்கள், மசூதிகள் மற்றும் பொது போக்குவரத்து இடங்கள் தவிர, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மற்ற அனைத்து பொது இடங்களிலும் முக கவசம் அணிவது விருப்பமாக மாற்றப்பட்டுள்ளது.

அத்துடன் கொரோனா பாதித்த நபர்களுக்கான தனிமைப்படுத்தல் காலம் ஐந்து நாட்களாக பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் மசூதிகள் போன்ற வழிபாட்டு தலங்களில் சமூக விலகல் நீக்கப்பட்டு அல் ஹோஸ்ன் செயலியில் கிரீன் பாஸின் செல்லுபடியாகும் காலம் 30 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

எங்களின் செய்திகளை #Youtube வழியாகவும் தெரிந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள் @khaleejtamil என்ற #Youtube பக்கத்தை #Subscribe செய்து கொள்ளுங்கள்.