ADVERTISEMENT

ஷார்ஜா: விபத்து காரணமாக போக்குவரத்தில் இடையூறு.. வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்த காவல்துறை..

Published: 21 Sep 2022, 10:43 AM |
Updated: 21 Sep 2022, 10:45 AM |
Posted By: admin

ஷார்ஜாவில் ஓத் ரக்கான் (Oud Rakan) பிரிட்ஜை நோக்கிச் செல்லும் மலேஹா ஸ்ட்ரீட்டில் விபத்து ஏற்பட்டதன் காரணமாக வாகன ஓட்டிகள் அப்பகுதியில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்குமாறு ஷார்ஜா காவல்துறை இன்று (புதன்கிழமை) அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

அல் புதையா பிரிட்ஜில் இருந்து ஓத் ரக்கான் பிரிட்ஜ் நோக்கி செல்லும் மலேஹா ஸ்ட்ரீட்டில் இந்த விபத்து நடந்ததால் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டதாக ஷார்ஜா காவல்துறை ட்வீட் செய்துள்ளது.

இதனால் வாகன ஓட்டிகள் கவனமாக செயல்படுமாறும், கால தாமதங்களை தவிர்க்க மாற்று வழிகளை பயன்படுத்துமாறும்
காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

ADVERTISEMENT