ADVERTISEMENT

UAE: அல் ஹோஸ்ன் கிரீன் பாஸின் செல்லுபடி காலம் அதிகரிப்பு.. செப்டம்பர் 28 முதல் அமல்.. அபுதாபி அரசு அறிவிப்பு..!!

Published: 26 Sep 2022, 8:05 PM |
Updated: 26 Sep 2022, 9:10 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதால், கொரோனாவிற்காக விதிக்கப்பட்டிருந்த சில கட்டுப்பாடுகளை அமீரக அரசு தளர்த்தி வருகிறது. தற்போது அதில் ஒரு பகுதியாக, அபுதாபியில் நடைமுறையில் இருந்து வரும் அல் ஹோஸ்ன் கிரீன் பாஸின் செல்லுபடி காலத்தை அபுதாபி அரசு அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

அபுதாபியில் உள்ள ஷாப்பிங் மால்கள், பொழுதுபோக்கு இடங்கள், சுற்றுலா தலங்கள் மற்றும் ஹோட்டல்கள் ஆகிய இடங்களில் நுழைவதற்கு, 14 நாட்கள் வேலிடிட்டியுடன் கூடிய அல் ஹோஸ்ன் கிரீன் பாஸ் என்பது கட்டாயமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், வரும் செப்டம்பர் 28 புதன்கிழமை முதல் அல் ஹோஸ்ன் கிரீன் பாஸ் 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் என்று அபுதாபி அரசு அறிவித்துள்ளது. இந்த செல்லுபடி காலம் PCR சோதனையில் நெகடிவ் முடிவை பெற்ற, தடுப்பூசி போடப்பட்ட நபர்களுக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இருப்பினும் தடுப்பூசி போடாதவர்கள், அல் ஹோஸ்ன் கிரீன் பாஸை தக்கவைத்துக் கொள்ள ஒவ்வொரு ஏழு நாட்களுக்கும் ஒரு முறை PCR பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அபுதாபி அரசு அமீரக குடியிருப்பாளர்களை அறிவுறுத்தியுள்ளது.

மேலும் விமான பயணம் மேற்கொள்ளும்போது, பயணிகள் விமானத்திற்குள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்று அமீரக அரசு அறிவித்துள்ள புதிய தளர்வுகளின் தொடர்ச்சியாக இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

ADVERTISEMENT

எங்களின் செய்திகளை #Youtube வழியாகவும் தெரிந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள் @khaleejtamil என்ற #Youtube பக்கத்தை #Subscribe செய்து கொள்ளுங்கள்.