ADVERTISEMENT

துபாய் DUTY FREE டிராவில் 1 மில்லியன் டாலர் வென்று கோடீஸ்வரரான இந்தியர்..!

Published: 15 Sep 2022, 1:31 PM |
Updated: 15 Sep 2022, 1:31 PM |
Posted By: admin

துபாய் டூட்டி ஃப்ரீ மில்லினியம் மில்லினியரின் 400வது மைல்ஸ்டோன் சீரிஸில் புதிய கோடீஸ்வரராக கேரளாவில் சிறு தகவல் தொழில்நுட்ப வணிகத்தை நடத்தி வரும் இந்தியர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். ஆகஸ்ட் 31 அன்று ஆன்லைனில் வாங்கிய டிக்கெட் எண் 3768 மூலம் முகமது நசருதீன் $1 மில்லியன் தொகையை பெற்று வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 2014 ஆம் ஆண்டு முதல் துபாய் டூட்டி ஃப்ரீ ப்ரோமோஷனில் தொடர்ந்து பங்கேற்ற வருகிறார்.

ADVERTISEMENT

இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், முன்னதாக நடைபெற்ற துபாய் டூட்டி ஃப்ரீ ஃபேஸ்புக்கில் ‘லைவ்’ டிராவை தவறவிட்டுள்ளார், மேலும் துபாய் டூட்டி ஃப்ரீயில் இருந்து அவர் வெற்றி பெற்றதாகத் தெரிவிக்கும் அழைப்பைப் பெற்றதில் மகிழ்ச்சி அடைந்தார். மேலும் இது குறித்து கூறிய முகமது நசருதீன் “இது எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் வாழ்க்கையை மாற்றும் தருணம். துபாய் டூட்டி ஃப்ரீ மில்லினியம் மில்லினியர் குழுவினருக்கு மிக்க நன்றி” என்று அவர் கூறினார்.

இதன் மூலம் 1999ஆம் ஆண்டு மில்லினியம் மில்லியனர் தொடங்கியதில் இருந்து $1 மில்லியனை வென்ற 196வது இந்திய நாட்டவர் நசருதீன் ஆவார், மேலும் துபாய் டூட்டி ஃப்ரீ மில்லினியம் மில்லினியர் டிக்கெட் வாங்குபவர்களில் இந்திய நாட்டினர் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

ADVERTISEMENT

மைல்ஸ்டோன் சீரிஸ் 400 துபாய் டூட்டி ஃப்ரீயின் நிர்வாக துணைத் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கோல்ம் மெக்லௌலின் (Colm McLoughlin) கூறுகையில், “இந்த பெரும் மைல்கல்லை எட்டியதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம், ஏனெனில் ஏற்கனவே 400 மில்லியன் டாலர்களை வழங்கி 47 நாடுகளைச் சேர்ந்த பலரின் வாழ்க்கையை மாற்றியுள்ளோம். எங்களின் 400வது வெற்றியாளரான முகமது நசருதீனுக்கு வாழ்த்துக்கள், மேலும் 1999 முதல் இதில் பங்கு கொண்ட எங்கள் அர்ப்பணிப்புள்ள வாடிக்கையாளர்களுக்கு நன்றி” என்றார்.