இந்தியாவின் அசோக் லேலண்ட் அமீரகத்தில் 1400 பள்ளி பேருந்துகளுக்கான ஆர்டர்களைப் பெற்றுள்ளதாகவும் ஒரு ஆர்டரின் மதிப்பு 75.15 மில்லியன் டாலர் என தெரிவித்துள்ளது. உலகின் மிகப் பெரிய பேருந்து உற்பத்தி நிறுவனமான அசோக் லேலண்ட் 55 இருக்கைகள் கொண்ட ஃபால்கான் பேருந்து மற்றும் 32 இருக்கைகள் கொண்ட ஓயஸ்டர் பேருந்துகளை இந்த ஆர்டரின் பேரில் தயாரித்து வழங்க உள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் 1400 பள்ளி பேருந்துகளுக்கான ஆர்டரை பெற்றுள்ள அசோக் லேலண்ட், அமீரகத்தில் முதல் முறையாக இவ்வளவு பெரிய ஆர்டரை பெற்றுள்ளது. சென்னை – அமீரகம் அஷோக் லேலண்ட் தொழிற்சாலைகள் இதை இணைந்து தயாரிக்கின்றன. முழுமையாக ஐக்கிய அரபு அமீரகத்தில் தயாரிக்கப்பட்டுள்ள அசோக் லேலண்ட் 55 சதவீத உதிரிபாகங்கள், வடிவமைப்பு மற்றும் தொழிலாளர்கள் அமீரகத்தைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள்.
ராஸ் அல் கைமா ஆலையானது அசோக் லேலண்ட் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் முதலீட்டு ஆணையம் (RAKIA) ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக ஆண்டுக்கு 4,000 பேருந்துகளை நிறுவும் திறன் கொண்ட அலையாக இது உருவாகியுள்ளது.