ADVERTISEMENT

பிரிட்டனின் நீண்ட கால அரச தலைவரான ராணி இரண்டாம் எலிசபெத் மரணம்..!!

Published: 9 Sep 2022, 5:06 AM |
Updated: 9 Sep 2022, 5:08 AM |
Posted By: admin

பிரிட்டனின் நீண்ட காலம் ஆட்சி செய்த ராணியும், ஏழு தசாப்தங்களாக நாட்டின் தலைவருமாக இருந்த உலக புகழ்பெற்ற ராணி இரண்டாம் எலிசபெத், தனது 96 வது வயதில் மரணம் அடைந்துள்ளார். இதனை பிரிட்டனின் பக்கிங்ஹாம் அரண்மனை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ராணி எலிசபெத் கடந்த ஆண்டு இறுதியில் இருந்தே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார். இதனால் அவர் தனது அனைத்து பொது ஈடுபாடுகளிலிருந்தும் விலகிக் கொண்டார். இந்த நிலையில் வியாழக்கிழமை அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்ததையடுத்து, ஸ்காட்லாந்தில் இருக்கக்கூடிய அவரது இல்லமான பால்மோரல் கோட்டைக்கு அவரது குடும்பத்தினர் விரைந்து சென்றனர். அங்கு ராணி அமைதியாக மரணமடைந்தார் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றது.

இதனைத் தொடர்ந்து 73 வயதாகும் அவரது மூத்த மகன் சார்லஸ், ஐக்கிய இராச்சியத்தின் (United Kingdom) மன்னராகவும், ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நியூசிலாந்து உட்பட 14 பிற நாடுகளின் தலைவராகவும் தற்பொழுது பொறுப்பில் உள்ளார்.

ADVERTISEMENT

அத்துடன் பிரிட்டனின் புதிய மன்னரான சார்லஸ், தனது தாயார் எலிசபெத் ராணியின் மரணத்திற்குப் பிறகு வியாழக்கிழமை பின்வரும் அறிக்கையை வெளியிட்டார்.  அதில் “எனது அன்புக்குரிய தாய், மகாராணியின் மரணம், எனக்கும் எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய சோகத்தின் தருணம். ஒரு நேசத்துக்குரிய இறையாண்மை மற்றும் மிகவும் நேசித்த தாயின் மறைவுக்கு நாங்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறோம். அவரது இழப்பு நாடு முழுவதும் மட்டுமல்லாது, மண்டலங்கள், காமன்வெல்த் மற்றும் உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற மக்களால் ஆழமாக உணரப்படும் என்பதை நான் அறிவேன்” என்று தெரிவித்துள்ளார்.

ராணி இரண்டாம் எலிசபெத், உலகின் மிக வயதான மற்றும் நீண்ட காலம் பதவியில் இருந்த அரச தலைவர் ஆவார். அவர் தனது 25 வயதில் பிப்ரவரி 6, 1952 அன்று தனது தந்தை கிங் ஜார்ஜ் VI இறந்ததைத் தொடர்ந்து அரியணைக்கு வந்தார். தற்போது அவரின் இறப்பிற்கு உலக தலைவர்கள், பொதுமக்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT