அமீரகத்தின் சட்டதிட்டங்களை அறிந்து அதன்படி நடக்க குற்றங்களைக் குறைக்கும் நோக்கிலும் அமீரக பொது வழக்குத்துறை அமீரக சட்ட திட்டங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் தகவல்களைப் பரப்பி வருகிறது.
அந்த வகையில், அமீரகத்தில் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் யாரும் எந்த வாகனங்களையும் இயக்குதல் கூடாது என பொதுவழக்குத்துறை எச்சரித்துள்ளது. போக்குவரத்துக்கான பெடரல் சட்ட எண் 21 (1995) பிரிவு 51-இன் படி தகுந்த ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனங்களை இயக்குபவர்களுக்கு 50,000 திர்ஹம்ஸ் வரையில் அபராதம் விதிக்கப்படும் அல்லது 3 மாதம் வரை சிறைத்தண்டனையும் அளிக்கப்படும்.
ஒருசில வகையான வாகனத்திற்கு ஓட்டுனர் உரிமம் பெற்றுவிட்டு வேறு வகையான வாகனங்களை இயக்குபவர்களுகும் இந்த சட்ட திட்டங்க்களுக்குள் உட்பட வேண்டும், இல்லையெனில் தண்டனைகள் வழங்க்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.