அமீரக செய்திகள்

UAE: துபாய் குளோபல் வில்லேஜ் VIP பேக்கேஜ்களை பெறும் அதிஷ்டசாலிக்கு பிரம்மாண்ட பரிசு வழங்க முடிவு..!

துபாய் குளோபல் வில்லேஜின் 27வது சீசன் இந்த மாதம் இறுதியில் துவங்க இருப்பதால், அதன் விஐபி பார்வயாளர்களுக்கு பரிசு பேக்ஸ்களை விற்பனை செய்யத் தொடங்குவதாகவும், மேலும் ஒரு அதிர்ஷ்டசாலி பணப் பரிசை வெல்ல வாய்ப்பிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விஐபி நுழைவு டிக்கெட்டுகள், பார்க்கிங் சலுகைகள் மற்றும் வொண்டர் பாஸ்கள் உள்ளிட்ட சிறப்பு பேக்குகள் செப்டம்பர் 24 முதல் விர்ஜின் மெகாஸ்டோர் Virgin Megastore டிக்கெட் இணையதளத்தில் ஆன்லைனில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு விஐபி பேக்கை பெறும் பார்வையாளர்கள் ஒரு தங்க நாணயத்தை பெற வாய்ப்பிருப்பதாகவும், அவருக்கு 27,000 திர்ஹம்ஸ் பிரம்மாண்ட தொகையையும் வெல்ல வாய்ப்பிருப்ப்தாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேக்கேஜ்களை செப்டம்பர் 17 முதல் 22 வரை 70 திர்ஹம்ஸுக்கு முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.

இந்த சிறப்பு தொகுப்புகள் அனைத்தும் பின்வருவனவற்றை உள்ளடக்கியது:

  • விஐபி நுழைவு டிக்கெட்டுகள்.
  • விஐபி பார்க்கிங் சலுகைகள்.
  • விஐபி வொண்டர் பாஸ்கள், ரிப்லியின் பிலீவ் இட் ஆர் நாட் (Ripley’s Believe it or Not), அக்வா ஆக்‌ஷன் ஸ்டண்ட் ஷோ (The Aqua Action stunt show) மற்றும் கார்னவல் ஃபன்ஃபேர் (Carnaval funfair) போன்ற நிகழ்ச்சிகள்.

விருந்தினர்கள் தேர்ந்தெடுக்கக்கூடிய விஐபி பேக்குகள்:

  • டயமண்ட் விஐபி பேக்குகள்: 6,000 திர்ஹம்ஸில் 28,000 திர்ஹம்களுக்கு மேல் மதிப்புள்ள பலன்கள் கிடைக்கும்.
  • பிளாட்டினம் பேக்குகள்: 2,500 திர்ஹம்ஸில் 15,000 மதிப்புள்ள பலன்கள் கிடைக்கும்.
  • தங்கப் பேக்குகள்: 1,950 திர்ஹம்ஸில்13,000 மதிப்புள்ள பலன்கள் கிடைக்கும்.
  • வெள்ளி பேக்குகள்: 1,600 திர்ஹம்ஸில் 10,000 மதிப்புள்ள பலன்கள் கிடைக்கும்.
  • செல்லுபடியாகும் எமிரேட்ஸ் ஐடியுடன் 18 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் ஒரு நபருக்கு 8 விஐபி பேக்குகள் வரை வாங்கிக்கொள்ளலாம்.

Related Articles

Back to top button
error: Content is protected !!