ADVERTISEMENT

UAE: 68,000 மில்லியனர்களை கொண்ட துபாய்..!! உலகின் பணக்கார நகரங்களின் பட்டியலில் எத்தனையாவது இடம் தெரியுமா..??

Published: 15 Sep 2022, 10:08 AM |
Updated: 15 Sep 2022, 10:29 AM |
Posted By: admin

உலகளவில் அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட நகரங்களின் தரவரிசையில், துபாய் தற்போது 23 வது இடத்தைப் பிடித்துள்ளது. இது குறித்து மேற்கொண்ட உலகளாவிய ஆய்வில் துபாயில் சுமார் 68,000 மில்லியனர்கள் இருப்பதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. துபாய் போன்றே அபுதாபி, ஷார்ஜா, ரியாத் மற்றும் தோஹா ஆகிய நகரங்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

ADVERTISEMENT

சமீபத்திய ஹென்லி குளோபல் சிட்டிசன்ஸ் (Henley Global Citizens Report) அறிக்கையின்படி, 2022 ஆம் ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான மில்லியனர்களைக் கொண்ட உலகின் முதல் 20 நகரங்களில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்துகிறது. அந்த அறிக்கையின்படி நியூயார்க் 345,600 மில்லியனர்களுடன் முதல் இடத்தில் உள்ளது, மேலும் இது தவிர மற்ற ஐந்து அமெரிக்க நகரங்களான சான் பிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்சல்ஸ், சிகாகோ, ஹூஸ்டன் மற்றும் டல்லாஸ் ஆகியவையும் உலகின் பணக்கார நகரங்களின் தரவரிசையில் உள்ளன.

மேலும் உலகளவில் தனிப்பட்ட நபர்களின் செல்வம் மற்றும் முதலீட்டு இடம்பெயர்வு போக்குகளைக் கண்காணிக்கும் சமீபத்திய அறிக்கையின் மூலம், துபாயின் மிகவும் பன்முகப்படுத்தப்பட்ட பொருளாதாரம் உலகளவில் அதன் நிலையை எவ்வாறு முன்னெடுத்துள்ளது என்பதைக் குறிப்பிடுகிறது.

ADVERTISEMENT

துபாயின் பொருளாதாரமானது அடிப்படை பொருட்கள், ஹோட்டல்கள், நிதி சேவைகள், எண்ணெய் மற்றும் எரிவாயு, ரியல் எஸ்டேட், சில்லறை வணிகம் மற்றும் போக்குவரத்து உட்பட பல முக்கிய துறைகளில் வலுவாக உள்ளது. அத்துடன் எமிரேட்ஸ் ஹில்ஸ், ஜுமைரா கோல்ஃப் எஸ்டேட்ஸ் மற்றும் பாம் ஜுமேரா போன்ற பிரதான குடியிருப்பு பகுதிகளையும் துபாயின் வசதியான பகுதிகளாக இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

நியூ வேர்ல்ட் வெல்த்தின் ஆராய்ச்சித் தலைவர் ஆண்ட்ரூ அமோயில்ஸ் (Andrew Amoils, Head of Research at New World Wealth) கருத்துப்படி, துபாயின் மில்லியனர் மக்கள் தொகை வேகமாக வளர்ந்து வருகிறது. இதனடிப்படையில் அமீரகம் 2030-ம் ஆண்டில் உலகளவில் முதல் 20 பணக்கார நகரங்களின் பட்டியலில் இணையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ரியாத், ஷார்ஜா, அபுதாபி, லுவாண்டா, தோஹா மற்றும் லாகோஸ் உட்பட வலுவான எண்ணெய் மற்றும் எரிவாயு தொழில்களைக் கொண்ட நகரங்கள் இந்த ஆண்டு சிறப்பாக செயல்படுகின்றன என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

ADVERTISEMENT

வேகமாக வளர்ந்து வரும் பட்டியலில் உள்ள மற்ற நகரங்களில் ‘இந்தியாவின் சிலிக்கான் சிட்டி’ என்று அழைக்கப்படும் பெங்களூர், வேகமாக வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம் மற்றும் வணிக செயல்முறை அவுட்சோர்சிங் துறைகளால் முன்னணி நகரமாக திகழ்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.