ADVERTISEMENT

துபாய்: தங்கும் இடங்களில் அதிரடி சோதனையை தொடங்கிய துபாய் முனிசிபாலிட்டி.. கூட்டமாக தங்கியிருப்பவர்களுக்கு எச்சரிக்கை..!!

Published: 25 Sep 2022, 6:09 PM |
Updated: 26 Sep 2022, 10:49 AM |
Posted By: admin

துபாயில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள், குடியிருப்பு விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளனரா என்பதை கண்டறியவும், தங்குமிடங்களில் “ஒற்றையர் அல்லது பல குடும்பங்களாக வசித்தல்” தொடர்பான விதிகளை உடனடியாக அமல்படுத்தவும், துபாயின் அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும், நேரடி கள ஆய்வுகளை துபாய் நகராட்சி முடுக்கிவிட்டுள்ளது.

ADVERTISEMENT

துபாயில் வசிக்கக்கூடிய குடியிருப்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, துபாய் நகர்ச்சியால் தொடங்கப்பட்டுள்ள இந்த பிரச்சாரம் துபாயின் குடியிருப்பு கட்டிடங்களில் வழிகாட்டுதல் மீறல்களை கண்காணிக்கும் என்றும் துபாய் முனிசிபாலிட்டி கூறியுள்ளது.

மேலும் இந்த ஆண்டு விதி மீறலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக “தகுந்த நடவடிக்கைகளை எடுக்க” ஒவ்வொரு நாளும் நேரடி கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இந்த ஆண்டில் இது வரையிலும் 19,837 கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் துபாய் நகராட்சி தெரிவித்துள்ளது. மேலும் இந்த நடவடிக்கையின் விளைவாக, குடியிருப்பாளர்கள் பலர் துபாயின் குடியிருப்பு விதிகள் மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றத் தொடங்கியுள்ளனர் என்றும் துபாய் நகராட்சி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

அத்துடன், இது தொடர்பாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை பொதுமக்கள் முறையாக பின்பற்ற வேண்டும் எனவும், இவ்வாறான விதிமீறல்களில் எவரேனும் ஈடுபட்டிருந்தால், அவர்கள் குறித்து 800900 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடர்பு கொண்டு புகாரளிக்குமாறும் துபாய் நகராட்சி குடியிருப்பாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று, துபாய் லேன்ட் டிபார்ட்மென்ட் ஆனது, துபாயில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களின் உரிமையாளர்கள், டெவலப்பர்கள், சொத்து மேலாண்மை நிறுவனங்கள் மற்றும் வில்லா அலலது பிளாட்டை வாடகைக்கு எடுத்தவர்கள் என அனைவரும், தங்களுடன் சேர்ந்து தங்கியிருக்கும் சக குடியிருப்பாளர்களின் விவரங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்ற புதிய அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

மேலும் இதனை துபாய் லேன்ட் டிபார்ட்மென்ட்டிற்கு சொந்தமான. துபாய் REST மொபைல் அப்ளிகேஷன் மூலம் பதிவு செய்யலாம் எனவும், அதிகபட்சம் இரண்டு வாரங்களுக்குள் உடனடியாக இது நடைமுறைக்கு வர வேண்டும் என்று துபாய் குடியிருப்பாளர்களுக்கு துபாய் லேன்ட் டிபார்ட்மென்ட் கெடு விதித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

எங்களின் செய்திகளை #Youtube வழியாகவும் தெரிந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள் @khaleejtamil என்ற #Youtube பக்கத்தை #Subscribe செய்து கொள்ளுங்கள்.