துபாயில் வசித்து வரும் வெளிநாட்டவர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு ஒன்றை துபாய் அரசாங்கம் அறிவித்துள்ளது. அதில், துபாயில் வாடகைக்கு விடப்படும் அனைத்து கட்டிடத்தின் உரிமையாளர்கள், அந்த கட்டிடத்தின் டெவலப்பர்கள், சொத்து மேலாண்மை நிறுவனங்கள் மற்றும் கட்டிடத்தை வாடகைக்கு எடுத்தவர்கள், என அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பித்துள்ளது.
அதன்படி, துபாயில் எங்கேனும் குடியிருப்பு கட்டிடங்களான வில்லா அல்லது அபார்ட்மென்ட்டில் வாடகைக்கு எடுத்து தங்கி இருப்பவர்கள், தங்களின் வீட்டில் வேறு நபர்களையோ அல்லது வேறு ஒரு குடும்பத்தினர்களையோ வாடகைக்கு குடியமர்த்தியிருந்தால், தங்களோடு சேர்ந்து தங்கியிருக்கும் அவர்களது விவரங்களையும், லேன்ட் டிபார்ட்மென்ட்டில் பதிவு செய்ய வேண்டும் என்று துபாய் அரசாங்கம் அறிவித்துள்ளது.
மேலும் இதனை, துபாயின் லேன்ட் டிபார்ட்மென்ட்டிற்கு சொந்தமான, துபாய் REST எனப்படும் மொபைல் ஆப் மூலம் பதிவு செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன் அதிகபட்சம் இரண்டு வாரங்களுக்குள் இந்த விபரங்களை பதிய வேண்டும் என்ற கட்டாயத்துடன், இந்த அறிவிப்பு உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் துபாய் லேன்ட் டிபார்ட்மென்ட் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன், தங்கள் சக குடியிருப்பாளர்களைப் பதிவு செய்ய, கட்டிடத்தின் அனைத்து உரிமையாளர்கள், டெவலப்பர்கள், சொத்து மேலாண்மை நிறுவனங்கள் மற்றும் வாடகைக்கு எடுத்தவர்கள், அவர்களின் தனிப்பட்ட விவரங்களை பதிவிடுவது, மற்றும் அவர்களின் எமிரேட்ஸ் ஐடியைச் சேர்ப்பது உட்பட, படிப்படியாக எட்டு செயல்முறைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும், துபாயில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு மேற்கூரியபடி, சக குடியிருப்பாளர்களின் விபரங்களை துபாய் REST ஆப்பில் பதிவு செய்தவுடன், அவர்களின் விவரங்களும் வாடகை ஒப்பந்தத்தில் (tenancy contract) தானாகவே புதுப்பிக்கப்படும் என்றும் துபாய் லேன்ட் டிபார்ட்மென்ட் துபாயில் வசிக்கும் அனைத்து குடியிருப்பாளர்களையும் அறிவுறுத்தியுள்ளது.
எங்களின் செய்திகளை #Youtube வழியாகவும் தெரிந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள் @khaleejtamil என்ற #Youtube பக்கத்தை #Subscribe செய்து கொள்ளுங்கள்.