ADVERTISEMENT

UAE Jobs: 800 க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு திட்டத்தை நடத்தவுள்ள எமிரேட்ஸ் குரூப்..!!

Published: 18 Sep 2022, 2:01 PM |
Updated: 18 Sep 2022, 2:25 PM |
Posted By: admin

விசிட் விசாவில் அமீரகத்திற்கு வந்து IT துறையில் வேலை தேடிக் கொண்டு இருக்கக் கூடியவங்களுக்கும், ஏற்கனவே இருக்க கூடிய வேலையை விட்டு IT டிபார்ட்மென்ட்டில் வேறு வேலை தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கும் பயனுள்ள வகையில் வேலைக்கு ஆட்சேர்க்கும் திட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT

அதாவது, துபாயின் மிகப்பெரிய விமான நிறுவனம் என்று கூறப்படும் எமிரேட்ஸ் குரூப், தங்கள் நிறுவனத்தின் IT டிபார்ட்மென்ட்டில் இருக்க கூடிய காலி பணியிடங்களுக்கு, திறமையானவர்களை தேர்ந்தெடுக்கும் விதமாக, RECRUITMENT DRIVE என்று சொல்லப்படும் வேலைக்கு ஆட் சேர்க்கும் ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது. எமிரேட்ஸ் குரூப்பின் இந்த காலி பணியிடங்களுக்கான ஆட் சேர்ப்பு திட்டமானது, வரும் செப்டம்பர் 19 ம் தேதி திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு தொடங்க இருப்பதாவும், இதில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கக்கூடிய IT PROFESSIONALS யாரு வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் என்றும் எமிரேட்ஸ் குரூப் நிறுவனம் கூறியுள்ளது.

துபாயில் இயங்கக்கூடிய எமிரேட்ஸ் குரூப், துபாய் மட்டும் அல்லாது, B2B என்று சொல்லக்கூடிய Business to Business Service,  B2C என்று சொல்லக்கூடிய Business to Customer Service என்று உலகில் இருக்க கூடிய 40க்கும் மேற்பட்ட பிராண்டுகள் மற்றும் தொழில்களுக்கு IT சேவையை வழங்கிட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இதனையடுத்து software engineering, DevOps, Hybrid cloud, Agile delivery, technical product management, Digital Workplace, cybersecurity, IT architecture, innovation and service management உள்ளிட்ட பல துறைகளில் இருக்க கூடிய 800 க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு வரக்கூடிய நாட்களில் வேலைக்கு ஆட்களை எடுக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த துறைகளுக்கான RECRUITMENT DRIVE பற்றிய கூடுதல் தகவல்கள, வரும் 19 ம் தேதி  www.emiratesgroupcareers.com என்ற வலைதளம் மூலமாகவோ அல்லது எமிரேட்ஸ் குரூப்பின் சமூக வலைதள பக்கங்கள் மூலமாகவோ அறிவிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அப்படி ஒருவேளை இந்த வேலைக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், www.emiratesgroupcareers.com என்ற இந்த வலைதளத்தில் அவ்வப்போது JOB UPDATE பற்றி செக் செய்து கொள்ளுமாறும் கூறப்பட்டுள்ளது.