அபுதாபி தொழில்துறை பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இன்று (சனிக்கிழமை) காலை தீ விபத்து ஏற்பட்டதாக அபுதாபி காவல்துறை தெரிவித்துள்ளது. தீவிபத்தை அறிந்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத் துறையினர் விரைந்து செயலாற்றி தீயினை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது அந்த இடத்தில் குளிர்விக்கும் பணி நடைபெற்று வருவதாக அபுதாபி காவல்துறை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளது. அத்துடன் இந்த தீ்விபத்து நிகழ்நத சம்பவத்திற்கான காரணத்தை கண்டறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
மேலும் அபுதாபி காவல்துறை மற்றும் குடிமைத் தற்காப்பு அதிகாரிகள், இது குறித்த செய்திகளுக்கு அதிகாரப்பூர்வ ஆதாரங்களை மட்டுமே நம்புமாறும் வதந்திகள் மற்றும் சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறும் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.
#أخبارنا | فرق #شرطة_أبوظبي وهيئة أبوظبي للدفاع المدني تنجح في السيطرة على حريق ناجم عن انفجار اسطوانة غاز في مصنع بمنطقة المفرق الصناعية
التفاصيل :https://t.co/8FScjjV4ht#أخبار_شرطة_أبوظبي pic.twitter.com/8XFF7iPa6g
— شرطة أبوظبي (@ADPoliceHQ) September 24, 2022