ADVERTISEMENT

கத்தார்: பூட்டிய பள்ளி பேருந்தில் மணி கணக்காக மாட்டிக்கொண்ட 4 வயது இந்திய சிறுமி..!! பிறந்த நாளிலேயே உயிரிழந்த சோகம்..!!

Published: 13 Sep 2022, 7:43 PM |
Updated: 13 Sep 2022, 7:49 PM |
Posted By: admin

கத்தாரில் வசிக்கும் கேரளாவைச் சேர்ந்த 4 வயது மின்சா மரியம் எனும் சிறுமி, செப்டம்பர் 11 அன்று தனது பள்ளி பேருந்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் அனைவரையும் சோகத்திற்குள்ளாக்கியுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து வெளிவந்த தகவலின்படி மின்சா அன்று காலையில் பேருந்தில் பள்ளிக்குச் செல்லும் போது பள்ளிக்கு போகும் வழியிலேயே தூங்கிவிட்டதாகவும், பள்ளி பேருந்து அவர்களின் பள்ளி வளாகத்தை அடைந்தபோது மின்சாவை கவனிக்காமல் அனைவரும் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் பேருந்தை நிறுத்திய பின் டிரைவர் பேருந்தை பூட்டிவிட்டு சென்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனைத் தொடர்ந்து நான்கு மணி நேரத்திற்கும் மேலாக பேருந்திற்குள் விடப்பட்ட பின்னர், பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் திரும்பி வந்த போது அச்சிறுமி பள்ளிப் பேருந்தில் மயக்கமடைந்து இருந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றாலும் அவரை காப்பாற்ற முடியாமல் சிறுமி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அன்றுதான் மின்சாவிற்கு பிறந்தநாள் என்றும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

இதனையடுத்து கத்தார் கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சகம் இந்த சம்பவம் குறித்து தற்போது விசாரணையில் உள்ளது. இது சம்பந்தமாக வெளியிடப்பட்ட ஒரு ட்வீட்டில்அமைச்சகம் மற்றும் அந்தந்த அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகள் மற்றும் குற்றவாளிகளுக்கு எதிரான அதிகபட்ச தண்டனை விதிமுறைகளை தற்போதைய விசாரணையின் முடிவுகளின் படி எடுக்கும்என்று தெரிவித்துள்ளது. அத்துடன் இறந்த மாணவரின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.