ADVERTISEMENT

அபுதாபியின் முக்கிய சாலையில் புதிய வேக வரம்பு..!! வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்திய காவல்துறை..!!

Published: 24 Sep 2022, 5:59 PM |
Updated: 24 Sep 2022, 6:27 PM |
Posted By: admin

வரும் திங்கள்கிழமை முதல் அபுதாபியில் உள்ள ஒரு முக்கிய சாலையில் புதிய வேக வரம்பு அமல்படுத்தப்படும் என்று அபுதாபி காவல்துறை தற்பொழுது அறிவித்துள்ளது. அதன்படி அபுதாபியில் உள்ள ஷேக் சையத் சாலையில் செப்டம்பர் 26 முதல் மணிக்கு 100 கிமீ வேக வரம்பு இருக்கும் என காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த வேக வரம்பானது கஸ்ர் அல் பஹ்ர் (Qasr al Bahr) இன்டர்செக்‌ஷனை நோக்கிய சாலையின் இரு திசைகளிலும் பொருந்தும் என்பதை ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும் அபுதாபியில் சாலை பாதுகாப்பைப் பேணுவதற்காக, புதிய விதிகளைப் பின்பற்றுமாறு வாகன ஓட்டிகளுக்கு அபுதாபி காவல்துறை அழைப்பு விடுத்துள்ளது.

ADVERTISEMENT